சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையாத இயக்குநர் எழில்.. இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் இயக்குநர் சுந்தர் சி-யைப் போலவே படம் முழுக்க நகைச்சுவையோடு மென்மையான காதல் கதைகளைச் சொல்வதில் திறமையான இயக்குநர் தான் எழில். அஜீத், விஜய், பிரபுதேவா, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விமல் உள்ளிட்ட ஹீரோக்களுக்கு சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் ஆரம்பித்த இவரது பயணம் தற்போது தேசிங்குராஜா 2 வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் பிரம்மாண்ட வெற்றி விஜய்க்கும் ஒரு திருப்பத்தைக் கொடுத்தது. இதனையடுத்து பிரபுதேவாவுடன் இணைந்து பெண்ணின் மனதைத் தொட்டு திரைப்படத்தினை இயக்கினார். இப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக விவேக் காமெடி இன்றுவரை மறக்க முடியாத வசனங்களாகத் திகழ்கிறது.

அதன்பின் அஜீத்தை வைத்து பூவெல்லாம் உன் வாசம், ராஜா ஆகிய படங்களை இயக்கினார். இதில் பூவெல்லாம் உன் வாசம் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படி தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர் எழில் சிவகார்த்திகேயனை வைத்து கடந்த 2012-ல் மனம் கொத்திப் பறவை படத்தினை இயக்கினார். சிவகார்த்திகேயனின் டைமிங் காமெடி இந்தப் படத்தில் அருக்கு நன்றாக ஒர்க்அவுட் ஆக அனைவரும் விரும்பும் ஹீரோவாக இந்தப் படத்தின் மூலம் உயர்ந்தார் சிவகார்த்திகேயன்.

எழுதமாட்டேன் என அடம்பிடித்த வைரமுத்து.. பிடிவாதத்துடன் எழுத வைத்த இசையமைப்பாளர்.. உருவாகிய தேசிய விருதுப் பாடல்

இந்தப் படத்தில் சூரி, சிங்கம்புலி ஆகியோருடன் இணைந்து காமெடியில் அட்டகாசம் செய்திருப்பார் சிவகார்த்திகேயன். இதனையடுத்தே சிவகார்த்திகேயனுக்கு இதே பாணியில் எடுக்கப்பட்ட வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் மாஸ் வெற்றியைக் கொடுத்தது. இயக்குநர் எழில், சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் அடுத்த படத்திலும் இணையவிருந்தனர்.

இதற்காக சிவகார்த்திகேயனுக்கு 5 லட்சம் அட்வான்ஸ் செக் வழங்கப்பட்டது. மனம் கொத்திப் பறவையின் வெற்றி சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்றுத்தர இயக்குநர் எழில் கொடுத்த செக்கை வங்கியில் போடாமல் வைத்திருந்தார் சிவகார்த்திகேயன்.

ஆனால் தயாரிப்பு தரப்பு சொன்ன தேதியில் அடுத்த படம் வேண்டும் என்று நிர்பந்திக்க உடனே உருவானது தான் தேசிங்குராஜா திரைப்படம். அந்த நேரத்தில் விமலும் சிவகார்த்திகேயனைப் போலவே வளர்ந்து கொண்டிருந்த ஹீரோவாக இருந்த சமயத்தில் தயாரிப்பு தரப்பு விமலை ஒகே சொல்ல இயக்குநர் எழிலும் விமலை ஹீரோவாக்கினார். அதன்பின் அடுத்தடுத்து விஷ்ணுவிஷால், விக்ரம் பிரபு, உதயநிதி என அடுத்த லெவல் ஹீரோக்களை வைத்து வரிசையாக படங்களை இயக்கினார். அதன்பின் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைய முடியாமல் போய்விட்டது.