இயக்குனர் அட்லீயின் அடுத்த படத்தில் இணையும் தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான்!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் அட்லி. பிரம்மாண்ட இயக்குனர் சங்கருக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் ஹிந்தியில் மாஸ் ஹீரோவை வைத்து மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தை இயக்கியுள்ளார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் இதுவரை 1100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக கூறப்படுகிறது. 1000 கோடிக்கு மேல் வசூலில் பட்டையை கிளப்பிய தென்னிந்திய தமிழ் இயக்குனர் என்ற பெருமையை அட்லி வென்றுள்ளார்.

இதுவரை 60 முதல் 70 கோடி வரை சம்பளமாக வாங்கி இருந்த அட்லி அடுத்த இயக்கம் திரைப்படங்களுக்கு 100 கோடி வரை சம்பளம் வாங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அட்லியின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தளபதி விஜய். தளபதி விஜய் அவர்களை அட்லி பொதுவாக தன் சொந்த அண்ணன் என பல மேடைகளில் கூறி இருக்கிறார். அந்த அளவிற்கு தளபதி விஜய்க்கும் இயக்குனர் அட்லிக்கும் இடையே ஆன நட்பு அனைவருக்கும் தெரிந்தது.

அந்த வகையில் 2016-ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தெறி திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அடுத்த ஆண்டு 2017 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய மெர்சல் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. அதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் பிகில் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரை பெற்றிருந்தது. இப்படி விஜய்க்கு அடுத்தடுத்து ஹிட் கொடுத்த இயக்குனர் அட்லி விஜயின் உதவி மூலமாகத்தான் ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார்.

ஜவான் படத்தின் படப்பிடிப்பின் போது தளபதி விஜய் இயக்குனர் அட்லிக்கு பலமுறை தொடர்பு கொண்டு படத்தின் நிலவரங்களை குறித்து விசாரித்ததாகவும், படத்தை நல்ல முறையில் எடுக்க பல ஆலோசனை கூறியதாகவும் இயக்குனர் அட்லி பல மேடைகளில் கூறியிருந்தார். மேலும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் தன் அண்ணன் விஜய் என்றும் தெரிவித்து இருந்தார்.

மேலும் ஜவான் படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து கொண்டிருந்தபோது இயக்குனர் அட்லியின் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி விஜய், இயக்குனர் அட்லி மற்றும் ஷாருக்கான் என மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்ட் ஆகியது. இந்நிலையில் இயக்குனர் அட்லியின் அடுத்த படம் என்ன என்பது குறித்த கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஜவான் படத்தின் சூப்பர் டூப்பர் கிட்டை தொடர்ந்து தளபதி விஜய் உடன் இணைந்து படம் இயக்க உள்ளாரா அல்லது நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து மற்றொரு படத்தை இயக்க உள்ளாரா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

சிம்பு சொன்ன ஒரே ஐடியா : தடாலென 30 கிலோ குறைந்த நடிகர் பாலா-இதான் அந்த சீக்ரெட்

அதற்கு இயக்குனர் அட்லி தற்பொழுது ஒரு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அட்லி தனது அடுத்த படத்தில் தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்க உள்ளதாகவும், மிகப்பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த படம் தயாராக உள்ளதால், இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணியில் தான் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இயக்குனர் அட்லியின் ஆஸ்தான ஹீரோ தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்தின் அப்டேட் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.