மண்டையில கர்வம் வைக்காதீங்க.. செய்யுற வேலை மேல கர்வம் வையுங்க..! வெறியேற்றும் செல்வராகவனின் Motivational Speech

By John A

Published:

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் சினிமாத்துறைக்கு தனது தந்தை கஸ்தூரி ராஜா மூலமாக வந்தாலும் அவரது தந்தைக்கு வாய்ப்புக் கிடைக்காத சூழ்நிலையில் பொறுப்பான மூத்த அண்ணனாக குடும்பத்தை திறம்பட வழிநடத்தி இருக்கிறார். இதனை கஸ்தூரிராஜா பெருமிதமாக பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

சினிமாவில் முதல் படத்தில் தனது தந்தையின் மூலமாக வந்தாலும் அடுத்தடுத்த படங்களில் செல்வராகவனுக்கென ஒரு தனி அடையாளத்தினை உருவாக்கினார். குறிப்பாக காதல் கொண்டேன், 7G ரெயின்போ, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற வெரைட்டியாக பல படங்களை இயக்கி முன்னனி இயக்குநராகத் திகழ்கிறார். மேலும் தற்போது பல படங்களிலும் வில்லன், குணச்சித்தரம் போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் செல்வராகவன் சமீப காலமாக பல மோட்டிவேஷன் கருத்துக்களைக் கூறி வருகிறார். இவரின் வார்த்தைகள் இளைஞர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் டானிக் ஆக இருப்பதால் அவரைப் பல இளைஞர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். சமீபத்தில் செல்வராகவன் உழைப்பு பற்றிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான ஏழு கடல் ஏழு மலை திரைப்படம்.. இயக்குநர் ராமுக்கு கிடைத்த அங்கீகாரம்

அதில், பொதுவா எல்லாரும் வேலை செய்யுற இடத்தைப் பற்றி நிறைய குறை கூறிக் கொண்டே இருப்பாங்க. பொதுவாக நீங்க செய்யுற வேலை மேல ஒரு கர்வம் இருக்கணும். வளரும் நாடுகளுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் ஒரு சிறு வித்தியாசம் தான் இருக்கும். வல்லரசு நாட்டைப் பார்த்தோம்னா அவங்க செய்யுற வேலை மேல ஒரு கர்வம் வைச்சுருப்பாங்க. ஆனா தலையில கர்வம் இருக்காது.

நீங்க ஆட்டோ டிரைவர்,டாக்ஸி டிரைவர் என எந்த வேலை வேண்டுமானாலும் செய்யுங்க. ஆனா செய்யுற வேலை மேல ஒரு கர்வம் வையுங்க. நீங்க செய்யுற வேலையைப் ரொம்ப விருப்பப்பட்டு செய்ய ரொம்ப மெனக்கெடத் தேவையில்ல, நான் எப்படா வேலையை முடிப்பேன்னு கடிகாரத்தைப் பார்க்காதீங்க.

கடிகாரத்தைப் பார்க்காம நீங்க வேலை செய்ய ஆரம்பிச்சாலே தன்னால வேலைல ஒரு ஆர்வம் வந்திடும். மலையேறும் போது உச்சியைப் பார்த்தோம்னா இன்னும் இவ்வளவு தூரம் இருக்கான்னு தோணும். அது மாதிரித்தான். உங்க வேலைய ரசிச்சுச் செய்யுங்க.” என்று செல்வராகவன் தனது இன்ஸ்டா பதிவில் ஒரு வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிவித்துள்ளார்.