’‘இந்தக் கேள்வி கேட்பீங்கன்னு தெரியும்..“ பட விழாவில் கடுப்பான இயக்குநர் அமீர்

நீண்ட நாட்களுக்குப்பின் இயக்குர் அமீர் நடித்துள்ள படம் மாயவலை. ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனங்களை அமீர் எழுதியுள்ளார். ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி, தீனா போன்றோர் நடித்துள்ள யுவன் சங்கர்ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இயக்குநர்  அமீர்- யுவன்சங்கர்ராஜா கூட்டணி ஏற்கனவே மௌம் பேசியதே, ராம், பருத்திவீரன் படங்களில் மெகாஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளதால் தற்போது மீண்டும்  இந்தக் கூட்டணியில் உருவான பாடல்களைக் கேட்க ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். வெற்றிமாறன் இப்படத்தை வெளியிடுகிறார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மெகா ஹிட் படங்களைக் கொடுத்த உங்களுக்கும் வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனர்களின் ஆதரவு தேவைப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் அமீர், ’‘பெரிய பெரிய ஹிட் கொடுத்த சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கே பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்களின் தயவு தேவைப்படும் போது நான் கேட்பதில் என்ன தவறு என்று பதிலளித்தார்.

மாஸ் ஹீரோ படங்களின் டிரைலரை மிஞ்சிய ரியல் ஹீரோ டிரைலர் : யார் அந்த பிரபலம் தெரியுமா?

மேலும் நான் என்னதான் படம் இயக்கி, தயாரித்து, நடித்திருந்தாலும் என்னை வடசென்னை மூலமாக வேறொரு தளத்தில் காட்டியவர் வெற்றிமாறன். அதனால் என்றென்றும் அந்தநன்றிக் கடன் இருக்கும் என்று பேசினார்.” வெற்றிமாறனையும் நடிக்க வைக்க ஆசை என்று பேச குறுக்கிட்ட வெற்றிமாறன் எனக்கு நடிப்பில் ஆர்வமில்லை. நடிக்கத் தெரிந்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறினார்.

இதனையடுத்து வெற்றி மாறன் பேசுகையில், தற்போது நான் இயக்கும் வாடிவாசல் படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அப்டேட்டையும் கொடுத்தார். மேலும் அமீரின் இறைவன் மிகப் பெரியவன் படத்தை காண ஆர்வமாய் இருப்பதாகவும் வெற்றி மாறன் பேசினார்.

வடசென்னை படத்தின் ராஜன் கதாபாத்திரத்தை இயக்குநர் அமீரை வைத்து வெற்றி மாறன் இயக்க தான் அந்த கேரக்டருக்கு பொருத்தமானவனா என அமீர் திரும்ப திரும்ப கேட்டாராம். வெற்றிமாறன் சரி என சொல்லவே பின் நடித்ததாகவும் அமீர் கூறியுள்ளார். வடசென்னை படம் இயக்குநர் அமீருக்கு சினிமாவில் பெரிய திருப்புமுனையைக் கொடுத்த படம் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு ராஜன் கதாபாத்திரத்தில் ஏரியா தாதாவாக கலக்கியிருப்பார்.