எது மாட்டுப் பாலுக்கு தடையா.. எந்த ஊர்ல இத பண்ணாங்க.. பொது மக்களை பதற வைக்கும் காரணம்..

இன்றைய காலகட்டத்தில் பால் விநியோகம் செய்யும் பல முன்னணி நிறுவனங்கள், எந்த அளவுக்கு அதனை தரம் உள்ளதாக கொடுக்கிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான். அதே போல மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு பிளாஸ்டிக் கவர்களில் பல ஊர்களில் பால் விநியோகம் செய்தாலும் அவற்றில் உள்ள தரம் நிச்சயம் நாம் ஆராய்ந்து பார்த்து உபயோகப்படுத்த வேண்டியவை ஆகும்.

இப்படி பல பால் நிறுவனங்கள் இருந்தாலும் ஒரு சிலர் நியாயமாக தரம் நிறைந்த பால்களையும் மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் எந்தவித பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்திலும் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி தாய்ப்பாலுக்கு நிகராக ஆரோக்கியம் நிறைந்த பாலாக கருதப்படுவது பசுவின் பால் தான்.

தாய்ப்பாலுக்கு பிறகு பல குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதையே வழக்கமாக வைத்துள்ள நிலையில், அவர்களின் ஆரோக்கியத்தையும் அறிவையும் வளர்ப்பதற்கான நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒரு சூழலில், சில நாடுகளில் பசும்பாலையே குடிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் மாகாணங்களை சுற்றியுள்ள பல பகுதிகளில் சமீப காலமாக பறவை காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி, உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பறவைக் காய்ச்சல் அவ்வபோது பல நாடுகளில் ஏதாவது ஒரு பகுதியில் பரவி வரும் வேளையில் உயிர் பாதிப்பு என்பது குறைவாகத்தான் இருக்கும்.

ஆனால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் மெக்சிகோவில் உயிரிழந்து போனதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. அப்படி ஒரு சூழலில் தான் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் மற்றொரு அதிர்ச்சி தகவலும் வந்து சேர்ந்தது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின்படி அமெரிக்காவை சுற்றியுள்ள நிறைய மாகாணங்களில் வளர்க்கப்படும் பசுக்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மொத்தம் அமெரிக்காவில் உள்ள 82 பசு மந்தைகளில் பறவை காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கே இருந்து கரந்த பாலை மக்கள் குடிக்க வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், அமெரிக்காவை சுற்றியுள்ள நாடுகளும் மக்கள் பசும்பால் குடிக்க தடை விதித்துள்ளது.

ஆனால் அதே வேளையில் பால் என்பது மிக மிக அத்தியாவசிய பொருளாக இருப்பதால் பலரும் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் குடித்து வருவது இன்னும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.