பிக் பாஸ் தமிழ் 7 போட்டியாளர்களின் மொத்த பட்டியலும் கசிந்து விட்டன.. யார் யார் பங்கேற்கிறாங்க பாருங்க!

By Sarath

Published:

உலகம் முழுவதும் பிக் பாஸ்:

உலகம் முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சி பிக் பாஸ் என்றும் பிக் பிரதர் என்றும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வீட்டில் பலதரப்பட்ட பிரபலங்களையும் சாதாரண மனிதர்களையும் உள்ளே அனுப்பி சுமார் 100 நாட்கள் அந்த வீட்டில் தாக்குப்பிடிக்கும் போட்டியாளர் யார்? அதில் மக்களின் அதிக ஓட்டுக்களையும் அன்பையும் பெற்று பிக் பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார்? என்கிற பரபரப்பு தான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட் என்று சொல்லலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சி பல போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய மேடையாக சினிமாவில் சாதிக்க கை கொடுத்துள்ளது. அதே அளவுக்கு சில போட்டியாளர்களுக்கு மோசமான முத்திரைகளையும் குத்தவைத்து அவர்களுக்கு நெகட்டிவ் இமேஜையும் சமூகத்தில் உருவாக்கி இருப்பதை மறக்க முடியாது.

மக்களுடன் கனெக்ட்டான கேம்:

பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பல கேமராக்களை மறந்துவிட்டு இயல்பாக தங்களது நிஜ முகத்துடன் போட்டியாளர்கள் விளையாட வேண்டும். அதிலும் சிறப்பாக விளையாட வேண்டும், ரசிகர்கள் ரசிக்கும்படி விளையாட வேண்டும். இப்படி விளையாடும் போட்டியாளர்களை தான் மக்களுக்கு மிகவும் பிடித்துப்போய் அவர்களுக்கு தினமும் ஓட்டு போடுவது, அடுத்தடுத்த வாரங்களுக்கு கூட்டிச் செல்வது இந்த நிகழ்ச்சியை ரசனைக்குரிய ஒன்றாக மாற்றுகின்றனர்.

ஒரு நிகழ்ச்சியில் போட்டியாளர்களை வெளியேற்றும் வாய்ப்பு மற்றும் உள்ளே தங்க வைக்கும் வாய்ப்பு மக்கள் கையில் கொடுக்கப்படுகிறது என்றால் அந்த நிகழ்ச்சியை அதிகம் மக்கள் காண்பார்கள், மக்களையும் போட்டியாளராகவே மாற்றியதன் வெற்றிதான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பல சீசன்களை கடப்பதற்கான காரணம் என்கின்றனர்

பிக் பாஸ் சீசன் 7லும் கமல்ஹாசன்:

உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஆண்டுதோறும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த ஆண்டும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி உள்ள நிலையில், விஜய் டிவியில் இன்று மாலை 6:00 மணிக்கு ரசிகர்களின் ஃபேவரைட்டான பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குகிறது.

முதல் புரமோவில் தாடி, மீசை இல்லாமல் இருந்த கமல்ஹாசன் அதற்குள் இவ்ளோ பெரிய தாடி மீசையுடன் எப்படி வந்தார் என்பதே ரசிகர்களுக்கு வியப்பாக இருக்கலாம். கெட்டப் சேஞ்ச் பண்றதுல கமலை மிஞ்ச முடியாது என்பது உண்மை தான் எனத் தெரிகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், கடைசி பட்டியலில் பலர் காணாமல் போய் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியுள்ளனர். கிடைத்துள்ள கசிந்த பட்டியலில் இருக்கும் அந்த உறுதியாக உள்ளே நுழைந்த 18 பேர் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.

போட்டியாளர்களின் முழு பட்டியல்:

1. கூல் சுரேஷ்
2. ரவீனா தாஹா
3. வினுஷா தேவி
4. விசித்ரா
5. பவா செல்லதுரை
6. யுகேந்திரன்
7. பூர்ணிமா ரவி
8. சரவண விக்ரம்
9. விஷ்ணு
10. ஐஷு
11. விஜய் வர்மா
12. அனன்யா ராவ்
13. பிரதீப் ஆண்டனி
14. நிக்சன்
15. மணி சந்திரா
16. அக்‌ஷயா உதயகுமார்
17. ஜோவிகா விஜயகுமார்
18. மாயா கிருஷ்ணன்

பிக் பாஸ் சீசன் 7ல் நுழைந்துள்ள18 போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வழக்கம் போல நிகழ்ச்சியின் ஷூட்டிங் நேற்று இரவு முடிவடைந்துள்ள நிலையில், கசிந்துள்ளது.

மேலும் உங்களுக்காக...