விஜயோட தம்பி அப்படிங்கிறதால சினிமால எனக்கு இதெல்லாம் நடந்துச்சு… விக்ராந்த் பகிர்வு…

த. வெ. க தலைவர் மற்றும் நடிகர் விஜயின் சித்தி மகனும், சகோதரரும் தான் நடிகர் விக்ராந்த். இவர் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் பணியாற்றுபவர். பார்ப்பதற்கு சற்று விஜய் சாயலில் இருப்பதால் திரையுலகில் நுழைந்த உடனே பிரபலமானவர்.

முதலில் 1991 ஆம் ஆண்டு ‘அழகன்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்த உடனே ஆர். வி. உதயகுமார் தனது படத்தில் நடிக்க அழைத்தார்.

அதை ஏற்றுக் கொண்ட விக்ராந்த், 2005 ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கிய ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். யார் இவர் பார்ப்பார்ப்பதற்கு விஜய் போலவே இருக்கிறாரே என்று ட்ரெண்டிங் ஆனவர் விக்ராந்த்.

தொடர்ந்து ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’, ‘முதல் கனவே’ போன்ற சிறிய பட்ஜெட் படங்களில் நடித்தார் விக்ராந்த். பின்னர் ‘கோரிப்பாளையம்’, ‘முத்துக்கு முத்தாக’ போன்ற குடும்ப படங்களில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். 2010 களில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட்டில் கலந்து கொண்டு தனது அபாரமான விளையாட்டினை வெளிப்படுத்தி பிரபலமானார். இன்று வரை மோஸ்ட் ப்ரோமிஸிங் நடிகராக வலம் வருகிறார் விக்ராந்த்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட விக்ராந்த் தனது சினிமா பயணத்தைப் பற்றி பேசுகையில், நான் விஜயின் தம்பி என்பதால் சினிமாவில் எளிதாக நுழைந்து விட்டேன், எந்த முன் பயிற்சிகளையும் எடுக்கவில்லை. ஆனால் அப்படி எளிதாக நுழைத்ததற்கான பலனையும் அனுபவித்து விட்டேன், நிறைய கஷ்டங்களை கடந்து விட்டேன் என்று கூறியுள்ளார் விக்ராந்த்.