முக்கிய தலையே மிஸ்ஸிங்! சர்ச்சை நாயகன் சிறப்பு விருந்தினரா? களைகட்டும் ‘வேட்டையன்’ விழா

Vettiyan Audio Launch: இன்று வேட்டையன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விழாவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். வழக்கம் போல ரஜினியின் ஒட்டுமொத்த குடும்பமும்…

vettai

Vettiyan Audio Launch: இன்று வேட்டையன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விழாவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். வழக்கம் போல ரஜினியின் ஒட்டுமொத்த குடும்பமும் வருகை புரிந்திருக்கின்றனர். வேட்டையன் திரைப்படத்தை டிஜே ஞானவேல் இயக்க லைக்கா இந்தப் படத்தை தயாரித்திருக்கிறது.

படத்திற்கு இசை அனிருத். படத்தில் ரஜினிக்கு மனைவியாக மஞ்சுவாரியார் நடித்திருக்கிறார். பகத் பாசில் மகளாக நடித்திருக்கிறார். கூடவே இவர்களுடன் அபிராமி, துஷாரா விஜயன். அமிதாப் பச்சன் போன்ற பல முக்கிய பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். படம் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் இன்று கோலாகலமாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

அதன் முதற்கட்ட அப்டேட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினியும் அமிதாப் பச்சனும் ஒன்று சேர்ந்து நடித்திருக்கின்றனர். இதற்கு முன் ஹிந்தியில்தான் ஒரு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதனால் இதுவே ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது.

அதனால் கண்டிப்பாக அமிதாப் இந்த ஆடியோ விழாவுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அமிதாப் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் மற்றுமொரு முக்கிய நடிகர் சிறப்பு விருந்தினராக வருவதாக சொல்லப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை. மலையாள சினிமாவையே உலுக்கும் மோகன்லால்தான். ஏற்கனவே மோகன்லாலை வைத்து லைக்கா லூசிபர் 2 படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது.

மேலும் ஜெயிலர் படத்திலும் ரஜினியுடன் மோகன்லால் நடித்திருக்கிறார். அடுத்து ஜெயிலர் 2விலும் ரஜினிக்கும் மோகன்லாலுக்கும் இடையில்தான் காட்சிகளே இருக்கிறதாம். அதனால்தான் மோகன்லால் சிறப்பு விருந்தினராக வருவார் என்று சொல்லப்படுகிறது.

படத்தை பொறுத்தவரைக்கும் பெரிய அளவில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆவது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் ஞானவேல் இயக்கும் படம் என்பதால் ஏதாவது ஒரு ஆழமான கருத்தை உள்ளடக்கிய திரைப்படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.