அந்தரத்தில் பறக்கும் கார்.. அஜர்பைஜானில் அஜீத்.. இறுதிக்கட்டத்தில் விடாமுயற்சி ஷுட்டிங்

அஜீத் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. துணிவு படத்தின் வெற்றிக்குப் பின் அஜீத் நடிக்கும் இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்புப் பணிகள் துவங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகியும் இன்னும் முழுமையாக ஷுட்டிங் முடியவில்லை. இடையில் இயக்குநருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடுகள் இருந்தது தற்போது தீர்க்கப்பட்டு மீண்டும் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதற்காக அஜீத் உள்ளிட்ட குழுவினர் அஜர்பைஜான் நாட்டிற்கு மறுபடியும் சென்றுள்ளனர். சில தினங்களுக்கு முன் அஜீத் ரேஸ் கார் ஓட்டும் வீடியோ வைரலானது. தற்போது இதேபோல் விடாமுயற்சி ஷுட்டிங் காட்சிகளும் வெளியாகி உள்ளது. அஜீத்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளத்தில் விடாமுயற்சி படப்பிடிப்புக் காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

வடிவேலுவுடன் நிறைய படங்களில் நடித்த காமெடி நடிகரின் பரிதாப நிலை.. உதவி கேட்டு உருக்கமான வீடியோ பதிவு

அதில் அஜீத் கார் ஓட்டுவது போன்றும், பின் அந்தரத்தில் சுழன்று பல்டி அடிப்பது போன்றும் காட்சிகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இதுபோன்றதொரு சேஷிங் காட்சியில் விபத்து ஏற்பட்டு நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி வைரல் ஆனது.

தற்போது அதேபோன்றதொரு காட்சி படம்பிடிக்கப்பட்டு வருகிறது. வலிமை படத்தில் பைக் ரேஸ், சேசிங் காட்சிகளில் கலக்கிய அஜீத், தற்போது விடாமுயற்சி படத்தில் கார் சேசிங் காட்சிகளில் தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக நடித்து வருகிறார். முற்றிலும் அஜீத் ரசிகர்களுக்கு இந்தப் படம் புது விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் சூழலில் வருகிற தீபாவளி அன்று விடாமுயற்சி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அஜீத் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் தொடர்ந்து நடிக்கிறார். இப்படமும் பொங்லன்று வெளியாகும் என பட அறிவிப்பின் போதே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக இந்த தீபாவளி ரசிகர்களுக்கு தல தீபாவளியாகவும், 2025 பொங்கலும் தல பொங்கலாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் உள்ளனர்.