தொழிலதிபரை திருமணம் செய்தவுடன் டார்ச்சர் செய்த பிரபலங்களை வச்சு செஞ்ச சமீரா ரெட்டி..!

By Bala Siva

Published:

சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்க போன போதும், சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதும் திரையுலக பிரபலங்கள் செய்த டார்ச்சரை தொழில் அதிபரை திருமணம் செய்த பிறகு வெளியில் கூறி டார்ச்சர் செய்தவர்களை வச்சி செஞ்சவர் தான் நடிகை சமீரா ரெட்டி.

நடிகை சமீரா ரெட்டி சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று மிகப் பெரிய ஆர்வத்தில் இருந்தவர். மாடலிங் தொழிலில் ஈடுபட்டிருந்த இவர் மிகுந்த சிரமத்திற்கு பின்னர் 2002ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படம் ஒன்றில் அறிமுகமானார்.

ஒரே ஒரு ஒன்லைன் கதை.. அபார திரைக்கதையால் பாக்யராஜின் சூப்பர் ஹிட் படம்..!

sameera reddy

அந்த படம் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தவுடன் அடுத்தடுத்து மூன்று பாலிவுட் படங்களில் நடித்தார். இதையடுத்து தான் அவருக்கு ‘நரசிம்மடு’ என்ற திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படம் சூப்பர் ஹிட்டானது. தெலுங்கிலும் இந்தியிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் தமிழில் சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘வாரணம் ஆயிரம்’ என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு சமீரா ரெட்டியின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்தது. இதனை அடுத்து தமிழில் அவர் அஜித்தின் ‘அசல்’, விஷால் உடன் ‘வெடி’, மாதவன், ஆர்யா நடித்த ‘வேட்டை’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

sameera reddy1

அதே போல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்த சமீரா ரெட்டி 2014ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரே தெருவில் இருந்ததால் அவ்வப்போது பார்த்து பழக்கமாகி, நட்பாகி அதன்பிறகு காதல் ஏற்பட்டதாகவும் இந்த காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைப்பெற்றது.

ரஜினி, கமல் படங்களில் நடிப்பு.. அரசியலிலும் வெற்றி.. ‘வாரிசு’ நடிகையின் வாழ்க்கைப்பாதை..!

கணவர் மிகப்பெரிய தொழிலதிபர் என்பதால், கோடிக்கணக்கில் சொத்து இருந்தது என்பதால் திருமணத்திற்கு பிறகு நடிப்பே வேண்டாம் என்று அவர் முடிவு செய்தார். இந்த நிலையில்தான் திடீரென திருமணத்திற்கு சில ஆண்டுகள் கழித்து ‘மீடு’ விவகாரம் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்தது. பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட தொல்லை குறித்து மனம் திறந்தனர்.

அப்போது சமீரா ரெட்டியும் தான் நடிக்க வாய்ப்பு கேட்டு போன போது, நடித்துக் கொண்டிருக்கும் போது சில திரையுலக பிரபலங்கள் கொடுத்த டார்ச்சர் குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறினார். அந்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

sameera reddy2

தமிழ் திரையுலக பிரபலங்கள் உட்பட பல பாலிவுட் பிரபலங்களின் முகத்திரையை அவர் கிழித்ததால் திரை உலகமே அதிர்ச்சியில் அதிர்ந்தது. ஒரு சிலர் சமீரா ரெட்டிக்கு போன் செய்து தயவு செய்து என்னுடைய பெயரை சொல்லி விடாதீர்கள் என்று கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. ஆனாலும் அவர் விடாமல் தன்னை டார்ச்சர் செய்த அனைவரையும் ஒன்று விடாமல் அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து அவருடைய கணவர் ‘போதும் இத்துடன் விட்டுவிடு’ என்று சொன்ன பிறகுதான் அவர் அந்த பிரச்சனையை விட்டதாக தெரிகிறது.

சமீரா ரெட்டியின் கணவர் ஒரு சக்திவாய்ந்த தொழிலதிபர் என்பதால் திரையுலகினர் சமீரா ரெட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை. சமீரா ரெட்டி தனது கணவர் தொழிலதிபர், கணவர் தனக்கு பாதுகாப்புடன் இருக்கிறார் என்ற தைரியத்தில்தான் அவர்  தனக்கு டார்ச்சர் செய்த பிரபலங்களை வைத்து செய்தார். இனிமேல் யாரும் நடிகைகளை அந்த கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது என்பதற்காகவே அதை செய்கிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

பாரதிராஜா படத்தில் அறிமுகமாகி ஒரு நாட்டிற்கே பிரதமரான நடிகை.. ஒரு அழகான காதலும் உண்டு..!

மொத்தத்தில் சமீரா ரெட்டி திரைப்படங்களில் நடிக்கும் போதும் போல்டாக இருந்த நிலையில் திரையுலகில் இருந்து விலகிய பின்னரும் திரையுலகை நடுங்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...