இத மட்டும் நான் செய்யாம இருந்திருந்தா.. திருமண வாழ்க்கை குறித்து ரேவதி உடைத்த ரகசியம்

By John A

Published:

தமிழ் சினிமாவில் பாரதிராஜா கண்டெடுத்த முத்துக்கள் ஏராளம். அதிலும் அவரே பெயரிட்டு புகழ் பெற்ற ‘ர’ வரிசை நடிகைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. ராதா, ரஞ்சனி, ராதிகா, ரஞ்சிதா, ராஜ ஸ்ரீ எனப் பல நடிகைகள் இருக்கின்றனர். அந்த வகையில் கேரள தேசத்திலிருந்து மண் வாசனை படம் மூலமாக அறிமுகமான ஹீரோயின் தான் ரேவதி. ஆஷா என்ற இயற்பெயர் கொண்டவரை சினிமாவுக்காக பாரதிராஜா ரேவதி என்று பெயர் மாற்றினார்.

மண்வாசனை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவே மளமளவென படங்களில் நடித்தார். தொடர்ந்து வைதேகி காத்திருந்தாள், ஆண்பாவம், உதயகீதம், மௌனராகம், கன்னிராசி, பகல் நிலவு என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து 80களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தார்.

இவர் மௌனராகம், புன்னகை மன்னன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது இவருக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் மேனனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இவர்கள் இருவரும் 1986-ல் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்களே இணைந்து நடித்து புதிய முகம் சொந்தப் படமும் எடுத்தனர்.

இப்படமும் வெற்றியைப் பெற்றது. திருமணத்திற்குப் பிறகும் ரேவதி பிஸியான நடிகையாவே அஞ்சலி, கிழக்கு வாசல், மறுபடியும், தேவர் மகன், மகளிர் மட்டும், அவதாரம் போன்ற படங்களில் நடித்து பிஸியான நடிகையாகவும் வலம் வந்தார் ரேவதி.

கும்கி படத்தால் மரியாதை இழந்து நடிகனான அப்பா நடிகர்.. கவிஞர் ஜோ மல்லூரிக்கு வந்த சோதனை

ஆனால் பொதுவாகவே சினிமா நட்சத்திரங்களில் பலரது திருமணம் விவாகரத்தில் முடிந்ததைப் போல ரேவதி-சுரேஷ் மேனன் தம்பதிகளிடையே விரிசல் விழ அது விவாகரத்தாக மாறியது. கடந்த 2002-ல் இருவரும் விவாகரத்துப் பெற்றனர். ரேவதி வளர்ப்பு மகள் ஒருவர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் குறித்து ரேவதி கூறுகையில், தான் வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் செய்த மிகப்பெரிய தவறு திருமணம் செய்தது தான் என்று கூறியுள்ளார்.

அதுவும் மௌனராகம், புன்னகை மன்னன் போன்ற சூப்பர்ஹிட் படங்கள் வெளியாகி ஓடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் திருமணம் செய்திருக்கக் கூடாது எனவும், இன்னும் சில ஆண்டுகள் தாமதித்து திருமணம் செய்திருந்தால் இன்னும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கலாம் எனவும் சித்ரா லட்சுமணன் உடனான பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் ரேவதி.

திருமணத்திற்குப் பின்னர் தற்போது ஜோதிகா கதையின் நாயகியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பதைப் போல, ரேவதியும் 90-களின் காலகட்டங்களில் முதிர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.