அந்தக் கண்ண பார்த்தாக்க லவ்வு தானா தோனாதா.. விஜய்யின் தற்போதைய லுக்.. இந்த ஹேர் ஸ்டைல் செட் பண்ணியது இவரா?

Published:

சென்னை : சென்னையில் நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் அனைவரையும் கவனம் ஈர்த்தது நடிகர் விஜய்யின் ஹேர் ஸ்டைல்தான். தற்போது வெங்கட்பிரபுவின் தி கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அந்தப் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் இருந்தார். இதற்காக மீசையை எடுத்தும் முடியை முன்னதாக வைத்தும் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வைத்திருந்தார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருவோரைச் சந்திக்க வந்த பொழுதும் இதே லுக்கில் வந்தார். தளபதி விஜய்யின் இந்த லுக் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் கடைசியாக நடித்த லியோ படத்திலும் அதிக முடியுடன் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வைத்திருந்தார்.

ஆனால் பிளாஷ்பேக் காட்சிகளில் மற்றொரு ஹேர்ஸ்டைல் வைத்திருப்பார். இந்நிலையில் நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் முடியை ஷார்ட் ஹேர் ஸ்டைல் லுக்குடன் வந்திருந்தார். நேற்று அரங்கில் நுழைந்த போது விஜய்யைப் பார்த்து மாணவ, மாணவிகளும், அவர்களது பெற்றோரும் மெய்மறந்து ரசித்தனர். அவருடம் விழா மேடையில் பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்தும் தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

தமிழக காவல் துறையினருக்கு கருணைத் தொகையை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. காவல் துறையினர் வரவேற்பு

அதிக அளவில் கவனம் ஈர்த்த இந்த ஹேர் ஸ்டைலை செட் செய்தது விஜய்யின் ஹேர்ஸ்டைலிஸ்ட் தேவ் சக்திவேல். நடிகர் விஜய் சமீபத்தில் தேவ்-க்கு போன் செய்து, “ தி கோட் ஷுட்டிங் முடிந்து விட்டது. எனவே வேறு ஹேர் ஸ்டைலை மாற்ற வேண்டும். எப்படி மாற்றலாம் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு தேவ் ஷார்ட்-ஆ ஹேர் ஸ்டைல் வைக்கலாம் என்று கூற, அப்போது விஜய் லியோ தாஸ் ஸ்டைலா என்று கேட்டிருக்கிறார். உடனே தேவ்-ம் ஆமாம் சார் என்று சொல்ல, அதன்படியே விஜய்க்கு இந்த ஹேர் ஸ்டைலை செட் செய்திருக்கிறார் தேவ் சக்திவேல். மேலும் பல பிரபலங்களுக்கும் தேவ் சக்திவேல் சிகை அலங்கார நிபுணராகப் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...