உச்சம் தொட்ட விஜய்யின் சம்பளம்.. ஷாரூக்கான், ரஜினியை பின்னுக்குத் தள்ளி முதலிடம்..

தளபதி 69 படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானதில் இருந்தே தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் ஒருபக்கம் கொண்டாடினாலும், மற்றொரு பக்கம் இது விஜய்யின் கடைசி படம் என்பதால் சோகத்திலும் உள்ளனர். இருப்பினும் லெஜண்ட் சரவணன்…

Vijay Salary

தளபதி 69 படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானதில் இருந்தே தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் ஒருபக்கம் கொண்டாடினாலும், மற்றொரு பக்கம் இது விஜய்யின் கடைசி படம் என்பதால் சோகத்திலும் உள்ளனர். இருப்பினும் லெஜண்ட் சரவணன் சொன்னது போல இத்தனை நாட்களாக விஜய்யைத் தேடி ரசிகர்கள் வந்தனர். இனி ரசிகர்களையும், மக்களையும் தேடிச் செல்லப் போகிறார் என்பதால் தளபதி 69 படத்திற்கு எக்கச் சக்க எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

தளபதி 69-ஐ இயக்க ஏ.ஆர். முருதாஸ் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் கடைசியாக ஹெச். வினோத் உறுதி செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அடுத்த வருடம் அக்டோபர் இறுதியில் வெளியாகும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் விஜய் ரசிகர்களுக்கு அடுத்த பட அறிவிப்பும் இனிப்பான செய்தியாக வந்திருக்கிறது.

எனக்கு அஜீத் மேல செம கோபம்.. காரணம் இதுதானா..? 25 வருட ரகசியத்தை அவிழ்த்த நடிகர் பார்த்திபன்

இந்நிலையில் விஜய் நடிக்கும் கடைசி படத்திற்கு அவர் எவ்வளவு சம்பளம் வாங்க உள்ளார் என்பது பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது தி கோட் படத்திற்கு 200 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றுள்ள விஜய் தளபதி 69 படத்திற்காக ரூ. 275 கோடி சம்பளம் பெற உள்ளாராம். இந்தியாவில் இதுவரை ஒரு படத்திற்கு அதிகபட்சமாக ஷாரூக்கான் அதிக சம்பளம் பெற்று வந்துள்ளார். இதற்கு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெறுகிறார்.

தற்போது இவர்கள் இருவரையும் பின்னுக்குத் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறார் தளபதி விஜய். இருப்பினும் அடுத்த ஒரு படத்திற்கு மட்டுமே இந்த சம்பளம் என்பதால் மீண்டும் ஷாரூக், ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் மீண்டும் விஜய்யை பின்னுக்குத் தள்ளலாம். தற்போது விஜய் ரசிகர்கள் அவரின் கடைசி படமான தளபதி 69 பல்வேறு வகைகளில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படத்தின் அறிவிப்பு வீடியோவும் மிக எமோஷனலாக உருவாக்கப்பட்டிருந்தது. விஜய் நடிக்காவிட்டாலும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் திரைத்துறையில் முன்னனி இயக்குநராக வலம் வர வேண்டும் என ரசிகர்கள் விரும்பி வருகின்றனர்.