ஹீரோயின்களிடத்தில் மோகன் இப்படித்தான் இருப்பாரா? பெருமையாகச் சொன்ன சுஹாசினி

இயக்குநர் மகேந்திரன் படைத்த முத்தான சினிமாக்களில் நெஞ்சத்தைக் கிள்ளாதே படமும் ஒன்று. தமிழில் மோகன் அறிமுகமான முதல் படம் இது. மறைந்த நடிகர்கள் சரத்பாபு, பிரதாப்போத்தன் ஆகியோருடன் நடித்திருப்பார். சுஹாசினி இதில் ஹீரோயினாக நடிக்க படம் ஓராண்டுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி கண்டது.

அதன்பின் மோகன் தமிழ் சினிமாவில் செய்யாத சாதனைகள் இல்லை. ரஜினி, கமலுடன் சக போட்டியாளராக விளங்கினார்.  பாலு மகேந்திரா இவரை கன்னடத்தில் கோகிலா திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். எனவே இவரது சினிமா குரு யாரென்றால் அது பாலுமகேந்திரா தான்.

பின் தன்குருநாதர் இயக்கிய மூடுபனி படம் வெளியானதிலிருந்து தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரானார். 1980 களில் மோகன் ‘வெள்ளி விழா நாயகன்’ என்று அழைக்கப்பட்டார். இவர் நடித்த கிட்டத்தட்ட எல்லா திரைப்படங்களும் வெற்றி அடைந்தது.

பெரும்பாலும் இவர் நடித்த திரைப்படங்கள் வெள்ளி விழா அல்லது 200 நாட்களுக்கு மேல் ஓட தொடங்கியது. பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் இவருக்கு சிறந்த நாயகனுக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுக்கொடுத்தது.

NK Movie

80களின் சினிமா காலக்கட்டத்தில் ஒரு நடிகருடன் தங்கள் மகள்கள் நடித்தால் கொஞ்சமும் கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கலாம் என ஹீரோயின்களின் அம்மாக்களால் புகழப்பட்டார் மோகன். இதனை நடிகை சுஹாசினி ஒரு பேட்டியில் பெருமையுடன் பகிர்ந்திருப்பார்.

விஜய் படத்தை மிஸ் செய்ததது நான் செய்த மிகப்பெரிய தவறு… இயக்குனர் சேரன்!

தன்னுடைய பெரும்பாலான பாடல்களில் மைக்பிடித்து நடித்திருப்பதால் இவருக்கு மைக் மோகன் என்ற அடைமொழியும் கொடுத்து கொண்டாடினர் ரசிகர்கள். ஆனால் இவருடைய கதைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்ததால் தொடர்ந்து ஜொலிக்கவில்லை. ஒரு நாளைக்கு 18 மணிநேரம் என ஓயாமல் நடித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தவர். 1990 களின் பிற்பகுதியில் இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த மௌனராகம் திரைப்படத்தை இந்த தலைமுறையினரும் கொண்டாடி வருகின்றனர். கணவன் – மனைவி புரிதலை சிறப்பாக எடுத்துரைத்த இந்தப்படம் 1986-ம் ஆண்டிற்கான தேசிய விருதையும் பெற்றது. இளையராஜாவின் இசை இவருக்கு அமோகமாகக் கைகொடுத்தது இவர் ராசி எனலாம். இன்றும் பாட்டுக்களின் நாயகன் என்றால் அது மோகன் மட்டும் தான்.

தற்போது ஹரா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.