குஷ்பு கல்யாணத்தில் அழுத நவரச நாயகன்.. இப்படி ஒரு பாசமா?

பொதுவாக திரைப்பிரபலங்கள் என்றாலே திரையில் ஜோடியாக நடித்தாலும், நிஜத்தில் சகோதர பாசத்துடனே பழகுவார்கள். அல்து தோழன், தோழியாகப் பழகுவார்கள். அந்த வகையில் 90-களில் பிரபல ஜோடியாகத் திகழ்ந்தவர்கள் தான் நவரச நாயகன் கார்த்திக் – குஷ்பு ஜோடி.

குஷ்பு முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகமானதே கார்த்திக் நடிப்பில் வெளியான வருஷம் 16 திரைப்படத்தில் தான். இப்படத்தில் பூப்பூக்கும் மாசம் பாடல் குஷ்புவை தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமம் வரை சென்று சேர்த்தது. இன்றும் விஷேச வீடுகளில் இந்தப் பாடல் ஒலிக்கத் தவறுவதில்லை.

இவ்வாறு கார்த்திக்கும்- குஷ்புவும் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தனர். அவற்றில் கிழக்கு வாசல், இது நம்ம பூமி, காத்திருக்க நேரமில்லை, விக்னேஷ்வர், சுயம்வரம் போன்ற படங்களில் இணைந்து நடித்தனர்.

குஷ்புவும் முன்னணி நடிகையாக ஜொலித்த ஆரம்பித்தார். இந்நிலையில் குஷ்புவின் கணவர் சுந்தர் சி கார்த்திக்கை வைத்து முதன்முதலாக உள்ளத்தை அள்ளித்தா படத்தினை இயக்கினார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து கார்த்திக்குடன் தொடர்ச்சியாக சில படங்களில் பணியாற்றினார் சுந்தர். சி.

இந்நிலையில் சுந்தர்.சி-யும், குஷ்புவும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். அப்பொழுது சுந்தர் சி கார்த்திக் நடித்த படத்தினை இயக்கிக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் தான் குஷ்புவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று தங்களது காதல் விஷயத்தை முதன் முதலில் கார்த்திக்கிடம் கூறியிருக்கிறார் சுந்தர் சி.

தல தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கேக் ஊட்டி மனைவி சாக்ஷி செஞ்ச அந்த ஒரு காரியம்..

அப்போது கார்த்திக் மிகவும் சந்தோஷப்பட்டாராம். அதன்பின் குஷ்புவும், சுந்தர் சியும் இருவரும் கார்த்திக் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். உடனே வீட்டுக்குப் போய் போன் போட்டு என் தம்பியும், தம்பி பொண்டாட்டியும் என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டாங்க என்று எமோஷனலாக அழுதிருக்கிறார் கார்த்திக்.. அந்த அளவிற்கு இவர்கள் இருவரின் மீதும் கொள்ளைப் பிரியம் வைத்திருக்கிறாராம் கார்த்திக்.

கடந்த வருடம் தனது மகன் கௌதம் கார்த்திக் – நடிகை மஞ்சிமாவின் காதலை ஆதரித்து அவர்கள் திருமணத்யும் முன்னின்று நடத்தினார் நவரச நாயகன் கார்த்திக்.