விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அப்பளம் போல் நொறுங்கிய கார்.. லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்..

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் ஜீவா. ஆசை ஆசையாய் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தவர் தொடர்ந்தி தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார். அமீர் இயக்கத்தில் வெளியான ராம் திரைப்படம் இவருக்கு நல்ல…

Jeeva

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் ஜீவா. ஆசை ஆசையாய் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தவர் தொடர்ந்தி தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார். அமீர் இயக்கத்தில் வெளியான ராம் திரைப்படம் இவருக்கு நல்ல முகவரியைக் கொடுத்தது. தொடர்ந்து ஈ, தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், அரண், நண்பன், கற்றது தமிழ், கோ, ஜிப்ஸி, எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது பிளாக் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜீவா.

இந்நிலையில் ஜீவா தனது குடும்பத்தினருடன் சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு தனது குடும்பத்துடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே சென்ற போது எதிரே வந்த டூவீலர் மீது மோதாமல் இருக்க காரை வளைத்த போது சென்டர் மீடியனில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது உள்ளே இருந்தது ஜீவா எனத் தெரிய வந்தது.

சென்னையில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு? மதுபோதையால் நடந்த வில்லங்கம்

ஜீவா உள்பட காரில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் மற்றொரு வாகனத்தை ஏற்பாடு செய்து ஜீவா தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சேலம் கிளம்பினார்.