விஜய் இப்போ செய்றத அஜீத் அப்பவே செஞ்சுட்டாரு.. வைரலாகும் அஜீத் போட்டோஸ்

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்று ஔவையார் கல்வியின் அவசியம் பற்றி கூறியிருப்பார். கல்வி என்பது ஒருவரை முழு மனிதனாக்குகிறது. உலகைப் புரிய வைக்கிறது. வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்கிறது. அதனால் தான் கல்விக்கு அனைத்து நாடுகளும் முக்கியத்துவம் அளித்து பல்லாயிரம் கோடிகளை செலவழித்து தரமான கல்வி நிறுவனங்களையும், சிறந்த மாணவர்களையும் உருவாக்குகின்றன.

அவ்வாறு சிறந்த மாணவர்களை ஊக்ககப்படுத்தி இன்னும் அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு தரப்பினரும் அவர்களின் உயர்கல்விக்கு உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான தளபதி விஜய் கடந்த ஆண்டு முதல் மாநில அளவில் பனிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, விருதுகள், பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது.

கிட்டத்தட்ட 10 நேரமாக விஜய் அவ்வப்போது சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு அனைத்து மாணவ, மாணவியருக்கும் விருதுகள், ஊக்கத் தொகை, பரிசுகள் வழங்கினார். மேலும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நேற்று தமிழகம் முழுக்க இச்செய்திதான் அனைத்து ஊடகங்களையும் நிரப்பியது.

மாணவர்களுக்கு பாராட்டு விழா.. விஜய் பேசிய அரசியல்.. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும்..!

இந்நிலையில் நடிகர் அஜீத்தும் இவ்வாறு பொதுத்தேர்வுகளில் சாதித்த மாணவ, மாணவியருக்கு விருது, ஊக்கத் தொகை வழங்கி கௌரவித்திருக்கிறார். இப்போது அல்ல. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அஜீத் பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கியுள்ளார்.

சப்தமில்லாமல் இன்றும் பல உதவிகளைச் செய்து வரும் அஜீத் பெரும்பாலும் விளம்பரங்களை விரும்புவதில்லை. சினிமாத் துறையில் மட்டுமல்ல பொதுமக்களுக்கும் அஜீத் மூலம் பயனடைந்தவர்கள் சொன்னால் மட்டுமே அஜீத் இவ்வளவு உதவிகள் செய்து வருகிறாரா என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.

தமிழக அரசியலில் மாற்றத்தை நோக்கி தமிழக வெற்றிக் கழகம் என அரசியல் அரங்கில் நுழைந்துள்ள விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அதற்கான ஆயத்தப் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அஜீத், விஜய் ஆகிய இருவருமே வெளியில் தெரியாமல் இன்னும் பல உதவிகளைச் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.