அஜர்பைஜானில் இருந்து புதிய வீடியோ! என்னம்மா இருக்காரு தல? அந்த ஸ்வாக் அப்படியே இருக்கே

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்த அஜித் அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை…

ajith (1)

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்த அஜித் அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று ரிலீஸ் என சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதிதான் ரகசியமாகவே இருக்கிறது. அதை பற்றி எந்தவொரு அறிவிப்பும் வெளிவராத நிலையில் கோடம்பாக்கத்திற்கு சம்பந்தப்பட்ட ஒரு சிலரே படம் கண்டிப்பாக தீபாவளி அன்றுதான் ரிலீஸ் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் தீபாவளிக்கு அமரன், அண்ணன் , குருதி பிச்சைககாரன் போன்ற படங்கள் ஏற்கனவெ துண்டு போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் போது எப்படி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் பேட்ச் வேலைகள் நடைபெற்று கொண்டு வருகின்றன. இன்னொரு பக்கம் படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி படமாக்க வேண்டியிருக்கிறது.

எல்லாம் முடிந்து டீஸர் வெளியானால்தான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பு அஜர்பைஜானில்தான் எடுக்கப்பட்டது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் இணைந்து அர்ஜூன், ஆரவ், ரெஜினா போன்ற முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் அஜித்தின் ஒரு புதிய வீடியோ ஒன்று சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அஜர்பைஜானில் இருக்கும் அஜித்தின் புதிய வீடியோதான் அது. அதில் தன் நண்பர்களுடன் ஸ்டைலாக அஜித் நடக்கும் மாதிரியாக அந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது.

கொஞ்ச நாள்களாகவே அஜித்தின் எந்தவொரு வீடியோவும் வராத நிலையில் இந்த வீடியோ இன்று வெளியானதும் அஜித் ரசிகர்கள் அதை பெரும் வைரலாக்கி வருகிறார்கள். முழுவதும் வெள்ளை நிற பேண்ட் சர்ட்டில் அஜித் நடந்து வருவது பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு அதிசயத்தை பார்த்த மாதிரி உணர்கிறார்கள். அந்தளவுக்கு அஜித்தை ரசிக்கிறார்கள் ரசிகர்கள்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C_sb6XximUV/?igsh=MXR4NHllNWNtZHFxcw==