B.Com இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்க்கக் கூடாது!!

By Vetri P

Published:

பொதுவாக நம் தமிழகத்தில் டிப்ளமோ படிப்புகள் படித்தால் நேரடியாக பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேர்த்துவிடும் திட்டம் நடைமுறையில் தான் உள்ளது. இந்த டிப்ளமோ படிப்பிற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் முதலாம் ஆண்டிலும், 12 ஆம் வகுப்பு முடித்து சென்றால் நேரடியாக டிப்ளமோ இரண்டாம் ஆண்டிலும் சேர்க்கப்படுவார்கள். இந்த நிலையில் டிப்ளமோ முடித்து இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு சேர்த்தாலும் வணிகவியலில் இதுபோன்ற சேர்க்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வணிகவியலில் டிப்ளமோ படித்த இரண்டு மாணவர்களின் நேரடியாக பி.காம் இரண்டாம் ஆண்டில் சேர்க்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வகை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்ககம் இத்தகைய உத்தரவினை பிறக்கத்துள்ளது. இத்தகைய உத்தரவு மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் இடையே பேர அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக அமைந்துள்ளது.

Leave a Comment