மாணவர்களே மகிழ்ச்சியான செய்தி; கோடை விடுமுறை நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியானது ஜூன் 7க்கு மாற்றப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதியும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் ஐந்தாம் தேதியும் பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் அரசுக்கு முன் வைக்கப்பட்டு வருகின்றன.

எனவே இதனையடுத்து தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.