டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் பிரித்தெழுதுக சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் எப்படியான கேள்விகள் கேட்கப்படும் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
பிரித்தெழுதுக:
தமிழெங்கள்- தமிழ் + எங்கள்
மொழியியல் – மொழி + இயல்
எம்பி – எம் + தம்பி
தென்பாலை – தெற்கு + பாலை
உரைத்தெனக்கருள் – உரைத்து + எனக்கு +அருள்
பெரும்பகுதி – பெருமை + பகுதி
ஈடில்லை – ஈடு + இல்லை
நீர்ச்சடை – நீர் + சடை
இளிவன்று – இளிவு + அன்று
நீரமுதம் – நீர் + அமுதம்
அமுதென்ற- அமுது + என்ற
கண்ணானாலும் – கண் + ஆனாலும்
எண்ணெய் – எள் + நெய்
வேரூன்றியது – வேர் + ஊன்றியது
சிற்றூர் – சிறுமை + ஊர்
நிலவென்று- நிலவு + என்று
சால்பென்னும் – சால்பு + என்னும்
யாதெனின் – யாது + எனின்
ஒருவற்கு – ஒருவன் + கு
பெருங்குணம் – பெருமை + குணம்
செம்பயிர்- செம்மை + பயிர்
நன்னாள் – நன்மை + நாள்
நன்றியுணர்வு – நன்றி + உணர்வு
செங்கரும்பு – செம்மை + கரும்பு
ஆரளவு – அருமை + அளவு
பொற்குற்ற – பொன் + கு + உற்ற
தற்குற்றம் – தன் + குற்றம்