டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் பிரித்தெழுதுக சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் எப்படியான கேள்விகள் கேட்கப்படும் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
பிரித்தெழுதுக:
வரலாற்றறிஞர்கள் – வரலாறு + அறிஞர்கள்
மூவகை – மூன்று + வகை
நன்செய் – நன்மை + செய்
புன்செய் – புன்மை + செய்
நறுநெய் – நறுமை + நெய்
நூற்றாண்டு – நூறு + ஆண்டு
செந்தமிழ் – செம்மை + தமிழ்
தொல்காப்பியம் – தொன்மை + காப்பியம்
பழந்தமிழர் – பழமை + தமிழர்
புறநானூறு – புறம் + நான்கு + நூறு
எத்திசை – எ + திசை
அச்செல்வம் – அ + செல்வம்
செவியுணவின் – செவி + உணர்வின்
இழைத்துணர்ந்து – இழைத்து + உணர்ந்து
வாயுணர்வின் – வாய் + உணர்வின்
பன்மொழி – பல + மொழி
பதிவேடு – பதிவு + ஏடு
பேராசிரியர் – பெருமை + ஆசிரியர்
அரும்பணி – அருமை + பணி
பழந்தமிழ் – பழமை + தமிழ்
சிற்றினம் – சிறுமை + இனம்
வாழ்வுரிமை – வாழ்வு + உரிமை
அறப்போர் – அறம் + போர்
தவிர்ந்துன்னை – தவிர்ந்து + உன்னை
புறச்சூழல் – புறம் + சூழல்
முக்கனி – மூன்று + கனி
வெருவிலான் – வெருவு + இலான்
நாண்மதி – நாள் + மதி