டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் பிரித்தெழுதுக சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் எப்படியான கேள்விகள் கேட்கப்படும் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
பிரித்தெழுதுக:
அலகிலா – அலகு + இலா
விருந்தொரால் – விருந்து + ஒரால்
முந்நூறு – மூன்று + நூறு
பேராசிரியர் – பெருமை + ஆசிரியர்
ஒலியாக்கி – ஒலி + ஆக்கி
சொற்றொடர் – சொல் + தொடர்
நன்றென்றல் – நன்று + என்றல்
தன்னாடு – தன் + நாடு
முந்நீர்; – மூன்று + நீர்
வெண்துகில் – வெண்மை + துகில்
பல்லாயிரம் – பல + ஆயிரம்
செவிக்குணவு – செவிக்கு + உணவு
செவிச்செல்வம் – செவி + செல்வம்
நாட்குறிப்பு – நாள் + குறிப்பு
பேரிடர் – பெருமை + இடர்
உறுப்புரிமை – உறுப்பு + உரிமை
அந்நாடு – அ + நாடு
உடலுழைப்பு – உடல் + உழைப்பு
பல்கலை – பல + கலை
எந்நலம் – எ + நலம்
துலையல்லார் – துலை + அல்லார்
பெருந்தலைவர் – பெருமை + தலைவர்
அந்நாளில் – அ + நாளில்
நாளன்று – நாள் + அன்று
பேரிடி – பெருமை + இடி
கருங்கோல் – கருமை + கோல்
பெருந்தேன் – பெருமை + தேன்
இந்நாளில் – இ + நாளில்
செந்நெல் – செம்மை + நெல்