டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் பிரித்தெழுதுக சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் எப்படியான கேள்விகள் கேட்கப்படும் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
பிரித்தெழுதுக:
தாமுள – தாம் + உள
யாரவர் – யார் + அவர்
தற்பிறர் – தன் + பிறர்
அறனல்ல – அறன் + அல்ல
மூலமொழி – மூலம் + மொழி
பேரறம் – பெருமை + அறம்
பெருந்தொழில் – பெருமை + தொழில்
தமிழெழுத்து – தமிழ் + எழுத்து
தண்டமிழ் – தண்மை + தமிழ்
பல்கலை – பல + கலை
செவிச்செல்வம் – செவி + செல்வம்
அவியுணவு – அவி + உணவு
அஃதொருவன் – அஃது + ஒருவன்
பிழைத்துணர்ந்து – பிழைத்து + உணர்ந்து
சுவையுணர – சுவை + உணர
ஏடாயிரம் – ஏடு + ஆயிரம்
ஏதிரிலா – எதிர் + இலா
விடுக்குமோலை – விடுக்கும் + ஓலை
சிரமசைத்திடும் – சிரம் + அசைத்திடும்
சீரில் – சீர் + இல்
பயனில் – பயன் + இல்
மெய்தானரும்பி – மெய்தான் + அரும்பி
விதிர்த்துன் – விதிர்த்து + உன்
சிற்றூர் – சிறுமை + ஊர்
நன்மொழி – நன்மை + மொழி
என்றிரந்து – என்று + இரந்து
பொற்கிழி – பொன் + கிழி
இன்னுயிர் – இனிமை + உயிர்
நல்லொழுக்கம் – நன்மை + ஒழுக்கம்