பாதியிலேயே விலகிய முதல் படம்.. அடுத்த படத்தில் ரவுண்டு கட்டி ஹிட் கொடுத்த சுந்தர் சி.

ஒரே ஒரு படத்தால் மனிதர்களின் ஒட்டுமொத்த டென்ஷனையும் தூக்கி எறிந்து தியேட்டரில் இரண்டரை மணி நேரம் வாய்விட்டுச் சிரிக்க வைத்தவர் சிரிப்பு டாக்டர் இயக்குநரான சுந்தர் சி. தமிழில் ஏற்கனேவே சுந்தர் கே.விஜயன், முக்தா சுந்தர் என இயக்குனர்கள் இருந்ததால் வினாயக சுந்தரவேல் என்ற பெயர் சுந்தர் சி. ஆக மாறியது.

தனது குருவான மணிவண்ணனிடம் இருந்து தனியே வந்து தனது முதல்படத்தை எடுக்கத் தயாரானார் சுந்தர் சி. அப்படம் தான் முறை மாப்பிள்ளை. அருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமான முதல் படம். முறை மாப்பிள்ளை ஷூட்டிங்கில் தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரனுடன் ஏற்பட்ட வேறுபாடால் வெளியேறினார் சுந்தர்.சி. பின் மீதிப் பட வேலைகளை மைனா, கும்கி படங்களை எடுத்த பிரபு சாலமன் தான் பார்த்தார்.

“இன்னிக்கு கற்பூரம் ஏத்தலைன்னா தீவிரவாதி ஆக்கிடுவாங்க..“ பா.ரஞ்சித் பரபரப்பு பேச்சு

சுந்தர்.சி தனது அடுத்த படத்தை படைத்தது ஒரு நூற்றாண்டின் காமெடி எனலாம். அப்படம் தான் உள்ளத்தை அள்ளித்தா. முதலில் நாயகியாக நக்மாவை நடிக்க ஆசைப்பட்ட அவர் பின் ரம்பாவை நடிக்க வைத்தார்.  உள்ளத்தை அள்ளித்தா பார்த்து விட்டு சிரிக்காமல் ஒரு மனிதனும் வெளியே வந்ததே கிடையாது.

அது வரை ஐட்டம் டான்சராக இருந்த ஜோதி மீனாவை இரண்டாவது நாயகியாக்கி ஒரே கல்லில் கவர்ச்சி+காமெடி மாங்காய்களை அடித்தார். படம் வெள்ளி விழா கொண்டாடியது. பின் மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக, கண்ணன்வருவான், அழகான நாட்கள் என கவுண்டமணி-கார்த்திக்-சுந்தர் காம்போ காமெடியை அள்ளி அள்ளிக் கொடுத்தனர். அதேடு நிறுத்தி விடாமல் பிரபுதேவாவோடு ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, சத்யராஜோடு ‘அழகர்சாமி’, சரத்குமாரோடு ‘ஜானகி ராமன்’, பிரசாந்தோடு ‘வின்னர்’, அர்ஜுனோடு ‘கிரி’வெரைட்டி ரைஸ்சும் கொடுக்க முடிந்தது சுந்தர்.சியால்.

சுந்தர்.சியே எதிர்பார்க்காத ஒரு விஷயம் அவர் வாழ்வில் மனைவி குஷ்புவால் நிகழ்ந்தது. அது தான் ‘அருணாச்சலம்’. சூப்பர் ஸ்டாரோடு இணைந்தது. ஆனால் ரஜினியின் அப்போதையா மாஸும், சுந்தர்.சியின் தரலோக்கல் காமெடியும் சரியாக சேராமல் படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.

தத்தளித்த சிவாஜி படம்.. எம்.ஜி.ஆர் படத்தை வைத்து கரையேற்றிய டைரக்டர் ஸ்ரீதர்

கமலோடு ‘அன்பே சிவம்’ படத்தில் இணைந்தது சுந்தர்.சிக்கு ஒரு புதிய அனுபவம். அன்பே சிவம் ஒரு டிராவலிங் படம். சுந்தர்.சி கமலோடு செய்த டிராவல் நிறைய அனுபவங்களை அவருக்கு தந்திருக்கும்.

அதன்பின் இணைந்த காம்போதான் சுந்தர்.சி வடிவேலு. வின்னர் படத்தில் தொடங்கியது. வின்னர் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் அதன் காமெடி ஒரு மைல் கல்லாக வடிவேலுவுக்கு அமைந்து விட்டது. சுந்தர்.சி வடிவமைத்த ‘கைப்புள்ள’ இன்று தமிழர்களின் வாழ்வில் வராத நேரமே கிடையாது. வின்னர் போன்றே அவர் பின்னாளில் வடிவேலுவோடு சேர்ந்த படங்களெல்லாம் இன்று யூடியூப், காமெடி சேனல்களில் டாப் ப்ளேஸ். பேக்கரி வீரபாகு, மேஜிக் கிரிகாலன், ஸ்டைல் பாண்டியெல்லாம் இன்றும் ரசிக்கும் கேரக்டர்கள்.

அஜித்தோடு உன்னை தேடியில் இணைந்த போது அஜித் இப்போது போல மாஸ் ஹீரோ கிடையாது. ஆனாலும் அதிலும் காமெடியும், சென்டிமெண்ட்டும் என பின்னியிருப்பார் சுந்தர். மாதவனோடு இணைந்து திருச்சியில் திருமணமண்டபம் தீப்பற்றி எறிந்த நிகழ்வை வைத்துஉருவாக்கிய ரெண்டு படம் ஒரு வித்தியாசமான முயற்சியாக நினைத்து எடுக்கப்பட்டவை.

சுந்தர்.சி படங்களின் காமெடிகளும், நிறைய காட்சிகளும் ஏற்கனவே பார்த்ததாக தோன்றினாலும், அதையும் மீறி நாம் சிரித்து விடுவது தான் சுந்தர்சியின் படைப்பிலக்கணம். தற்போது அரண்மணை, கலகலப்பு என அடுத்த தலைமுறை ஹீரோக்களையும் தனது பாணியில் இயக்கி தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறார் சுந்தர் சி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews