“இன்னிக்கு கற்பூரம் ஏத்தலைன்னா தீவிரவாதி ஆக்கிடுவாங்க..“ பா.ரஞ்சித் பரபரப்பு பேச்சு

இன்றைய தினம் இந்திய நாடே அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தினை தேசத் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். பல சர்ச்சைகளுக்கும், வழக்குகளுக்கும் இடையே அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகம் கண்டுள்ளது. இதனால் நாடே ஒருபுறம் பக்திமயமாக இருக்க அதற்கு எதிர்வித்து பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். ஒரு சமய விழாவினை, அரசியல் விழாவாக பி.ஜே.பி மாற்றுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் அயோத்தி ராமர் கோவில் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.  பா.ரஞ்சித் தனது நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் தான் புளு ஸ்டார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் கிரிக்கெட் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 96 படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையானை ஓவர்டேக் செய்யப் போகும் அயோத்தி ஸ்ரீராமர்.. குவிந்த நன்கொடை.. கோவில்ல அப்படி என்ன ஸ்பெஷல்

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “ ரொம்பவும் முக்கியமான நாள் இன்று. இன்று நாம் வீட்டில் கற்பூரம் ஏற்றவில்லை என்றால் தீவிரவாதிகளாக ஆகிவிடுவோம். தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுகள் இன்னும் 5-10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்ற பயத்தை உணர்த்துகிறது. அதுபோன்ற காலகட்டத்திற்கு நுழையும் முன் நம் மூளையில் ஏற்றி வைத்திருக்கின்ற பிற்போக்குத் தனத்தையும், தினமும் சொல்லிக் கொடுக்கப்படும் மதவாதத்தையும் நம்மிடம் இருந்து அழிக்க கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம்.

முட்டி மோதிக் கொண்ட டி.எம்.எஸ்-இளையராஜா.. குரல் திருப்தி இல்லாததால் பாடிய எஸ்.பி.பி

இந்தநாள் முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த நாளில் இருந்து புதிய வரலாறு ஆரம்பிக்கிறது. அந்த வரலாற்றில் நாம் எங்கு இருக்கிறோம் என்ற யோசனை நமக்கு வேண்டும். புளு ஸ்டார் என்ற பெயரே அரசியல் தான். அந்த நீல நட்சத்திரம் நம்மை சரியாக வழிநடத்தும் என நம்புகிறேன். ” என்று பா.ரஞ்சித் கூறினார்.

பல்வேறு தரப்பினரும் அயோத்தி ராமர் கோவில் விஷயத்தில் கருத்துத் தெரிவித்து வரும் வேளையில் பா.ரஞ்சித் இவ்வாறு பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.