இந்த ஏரியா, அந்த ஏரியா, இந்த இடம், அந்த இடம், ஆல் ஏரியாவுலயும் ஐயா கில்லிடா… திமுக போட்ட பேஸ்மெண்ட், எனக்கு அப்புறம் என் மகன் வரனும், அதுக்கு அப்புறம் என் பேரன் வரனும்ங்கிறது.. ஆனால் விஜய் போடுறது எனக்கு அப்புறம் இன்னொரு இளைஞன் வரனும், அதுக்கு அப்புறம் இன்னொரு இளைஞன் வரனும்ங்கிறது… இதுதான் ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம்.. எது மக்களுக்கு பிடிக்கும்ன்னு எல்லோருக்கும் தெரியும்..ஜூலை 11, 2026, 21:02
நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரியெல்லாம் இல்லை.. நான் ஒரு தடவை தான் சொல்லுவேன்.. ஒரே தடவை தான் சொல்வேன்.. என் பேச்சை கேட்டு நடக்கனும்… பட்ஜெட் தயாரிப்பு ஆலோசனை கூட்டத்திற்கு ஹோம் வொர்க் செய்துவிட்டு வருகிறார் முதல்வர் விஜய்.. வெளிநாட்டின் உட்கட்டமைப்பு திட்டங்களை வீடியோவாக அதிகாரிகளிடம் காட்டி, இதேபோல் என் தமிழ்நாடு மாறனும், அதுக்கு எவ்வளவு செலவாகும்? என்னென்ன செய்யனும்ன்னு சொல்லுங்க என ஆலோசனை கேட்கிறார்…ஜூலை 11, 2026, 18:59
கேரளாவுல மலையை உடைக்க தடை.. ஆனால் தமிழ்நாட்டில் மலையே காணாமல் போனலும் கண்டுகொள்ளாமல் இருந்த அரசியல்வாதிகள்.. இனிமேல் அது நடக்காது.. நம்ம தவெக மினிஸ்டர் பிரபு போட்டாரு பாருங்க ஒரு தடை.. இனிமேல் தமிழ்நாட்டில் இருந்து கனிமவளங்கள் ஏற்றுமதி செய்ய முடியாது.. தமிழ்நாட்டில் மட்டும் விக்கனும்..கனிம வளம்ங்கிறது தமிழகத்தோட சொத்து! அதைச் சுரண்டிச் சுகம் பார்த்த காலம் முடிஞ்சுது… இனி நம்ம வளத்தை நாமதான் பாதுகாக்கணும், அதுக்கு தவெக அரசு எடுத்த முயற்சி தான் இது…ஜூலை 11, 2026, 18:40
தி.மு.க கூட்டணி தோற்று போனது ஒரு கவலை, அதைவிட நம் கண் முன்னாலையே அ.தி.மு.க சிதறடிக்கப்படுவது இன்னொரு கவலை.. தி.மு.க மறுபடியும் ஆட்சிக்கு வருமானு ஒரு கவலை.. திராவிட அரசியல் இருந்தால் தான் பாஜக, ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டுக்குள் நுழையாது… கவலையுடன் பேசிய திருமாவளவன்.! திமுகவும், அதிமுகவும் மாறி மாறி கொள்ளையடித்தால் கவலையில்லை.. மக்கள் பணத்தை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளும் குத்தகைக்கு எடுத்து மாறி மாறி சுரண்டினால் கவலையில்லை.. லஞ்சம், ஊழல், புரையோடினால் கவலையில்லை.. அதைவிட முக்கியம் பாஜக, ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டுக்குள் நுழையக்கூடாது.. இது என்னப்பா புது அரசியலா இருக்குது? நெட்டிசன்கள் பதிலடி…ஜூலை 11, 2026, 18:25
ஒரு முதலமைச்சர் இப்படித்தான் பேசனும்.. இப்படித்தான் டிரஸ் போடனும்.. இப்படி தான் பொதுவெளியில் இமேஜை காப்பாற்றி கொள்ளனும் என்ற மரபை உடைத்திருக்கிறார் முதல்வர் விஜய்.. பாட்டிலுக்கு 10 ரூபாய் என முதலமைச்சர் ஆவதற்கு முன் இதே கரூரில் பாட்டு பாடினார்.. இன்று முதலமைச்சர் ஆன பின்னர் ‘வர்றான் பாரு வேட்டைக்காரன்’ன்னு பாட்டு பாடுகிறார்.. ஒரு முதலமைச்சர் பொது மேடையில் பாட்டு பாடியதை யாரும் இதுவரை பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை.. முதல் தேர்தலில் கூட்டணியே இல்லாமல் ஆட்சியை பிடித்தது முதல் அனைத்து மரபுகளையும் உடைத்த ஒரே தலைவர் இந்தியாவிலேயே விஜய் தான்.. அவர் என்ன செய்தாலும் டிரண்ட் ஆகுது.. வாடகை வாய்கள் மட்டுமே குறை சொல்கின்றனர்.. மக்கள் போற்றி பாராட்டுகின்றனர்….ஜூலை 10, 2026, 19:21
இன்னிக்கு முதலமைச்சர் விஜய் பேச்சை கேட்டதுக்கு அப்புறமும் தவெக ஆட்சியை கவிழ்க்கனும்ன்னு திமுக, அதிமுக முயற்சிப்பாங்களா? அப்படி முயற்சித்தாங்கன்னா டவுசர் கழண்டுடும்.. அவ்வளவு கோபத்தில் இருக்காரு விஜய்.. மாத்தி மாத்தி கொள்ளையடிச்சதும் இல்லாமல், ஒரு ஆட்சி அமைந்த முதல் நாளில் இருந்தே கவிழ்க்க முயற்சித்தா அதை தைரியம் என்று சொல்வதா? அசட்டுத்தனம் என சொல்வதா? என தெரியவில்லை.. அவரை தேவையில்லாம சீண்டிட்டிங்க.. இனிமேல் தப்பிக்கவே முடியாது.. ஆதாரம் திரட்டி முடிஞ்சதும் ஒவ்வொருத்தரா ஜெயிலுக்கு போறது நிச்சயம்…ஜூலை 10, 2026, 19:04
2008 அமெரிக்க தேர்தலின்போது ஒபாமாவுக்கு கிடைச்ச அந்த எழுச்சி, இன்னைக்கு தமிழகத்துல விஜய்க்கு கிடைச்சிருக்கு! இது வெறும் அரசியல் மாற்றம் இல்ல, ஒரு புதிய யுகத்தோட ஆரம்பம்! பழைய அரசியலை நம்பி இருக்குறவங்களுக்கு, முதல்வர் விஜய்யோட ஒவ்வொரு அடியும் ஒரு பெரிய பாடம். பாரம்பரிய கட்சிகள் தங்களோட செல்வாக்கை மீட்டெடுக்க போராடுறப்ப, விஜய் மக்கள் மனசை ஜெயிச்சுட்டு இருக்காரு!ஜூலை 10, 2026, 15:57
ஒருத்தர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார். உடனே ஸ்டாலின் சார் என நினைக்காதீங்க… எனக்கு ஸ்டாலின் சார் மீது தனிப்பாசம் உண்டு. வேற ஒருத்தர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் போனாரே… அத சொன்னேன்.. கரூரில் நக்கல் செய்த முதல்வர் விஜய்..ஜூலை 10, 2026, 13:44