Category: செய்திகள்

cm vijay 34

ராஜ்யசபா எம்பியை காங்கிரசுக்கு தூக்கி கொடுத்த விஜய்யை கிண்டல் பண்ணியா பேசுறீங்க.. தவெகவுல ஆளே இல்லை அதனால விஜய் கொடுத்துட்டாருன்னா பேசுறீங்க.. இது ஏமாளித்தனம் இல்லை, ராஜதந்திரம்.. வெறும் 2 வருஷ ராஜ்யசபா பதவியை விட்டு கொடுத்து 2029ல்ல பெரிய பேரம் பேச போறாரு விஜய்.. சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கிறது.. இதெல்லாம் கருணாநிதி காலத்து பழைய அரசியல் செய்றவங்களுக்கு புரியாது.. ஏன்னா நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டருடா…

ஜூன் 3, 2026, 21:06
cm vijay 34

ஆட்சிக்கு எதிரா குற்றம் சொல்லவே பயந்தாங்க.. சொன்னாலும் செய்ய மாட்டாங்கன்ற வெறுப்பு தான் மக்கள் மனசுல இருந்துச்சு.. இப்ப தான் எங்க ஊர்ல தண்ணி இல்லை, எங்க ஊர்ல சாலை இல்லை, எங்க ஊர்ல ஸ்கூல் இல்லைன்னு தைரியமா முதலமைச்சருக்கே டேக் செய்து சொல்லும் தைரியம் மக்களுக்கு வந்துருக்கு.. 50 வருஷமா அடிப்படை வசதி கூட செஞ்சு கொடுக்காம ரெண்டு திராவிட கட்சிகளும் என்ன செஞ்சிகிட்டு இருந்துச்சு.. 50 வருஷமா பயந்து கிடந்த கூட்டத்தை, 30 நாள்ல தைரியமா கேள்வி கேட்க வச்சிருக்காரு பாரு… அந்த தைரியத்தோட பேரு தான் ‘விஜய்’, அந்த மாற்றத்தோட பேரு தான் ‘தவெக’!

ஜூன் 3, 2026, 17:35
vijay stalin

தேர்தலுக்கு முன்பு செய்த அதே தவறை தேர்தலுக்கு பின்னரும் திமுக செய்து கொண்டிருக்கிறது.. விஜய்யை கேலி செய்வது, தற்குறி என கிண்டல் செய்வது, டெபாசிட் கூட வாங்க மாட்டார் என அவதூறாக பேசியதை மக்கள் ரசிக்கவில்லை.. அதேபோல் விஜய் ஆட்சியை குறை சொல்வதையும் மக்கள் ரசிக்க மாட்டார்கள்.. ஒரு எதிர்க்கட்சி நல்லது செய்யும் போது பாராட்டியும் தவறு செய்யும்போது விமர்சித்தால் மட்டுமே மக்கள் நம்புவார்கள்.. 50 வருடங்கள் மாநிலத்தை சீரழித்த சக்திகள் விமர்சனம் செய்வதற்கான தகுதியையே இழந்துவிட்டன.. கொஞ்சம் நாள் அமைதியாக இருப்பது தான் திராவிட கட்சிகளுக்கு நல்லது. இல்லாவிட்டால் அசிங்கப்பட்டு போயிருவீங்க…

ஜூன் 3, 2026, 17:20
amitshah annamalai

மோடியும் அமித்ஷாவும் அண்ணாமலையை வாழ்த்தி அனுப்பினார்களா? ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.. இந்தியாவில் தமிழ்நாடும், கேரளாவும் எங்களுக்கு வேண்டாம்.. இந்த ரெண்டு மாநிலங்களும் எங்களுக்கு சரிப்பட்டு வரமாட்டேங்குது.. நீயாவது போய் விளையாடு.. எங்களுக்கு அதிமுகவும் திமுகவும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது.. அதுக்கு என்ன செய்யணுமோ செஞ்சிக்கோ.. தமிழக பாஜகவினரை வச்சிகிட்டு ஒரு ஆணியும் பிடுங்க முடியாது.. அண்ணாமலைக்கு ஆசி வழங்கிய அமித்ஷா?

ஜூன் 3, 2026, 12:16
vijay annamalai udhayanidhi

விஜய் – அண்ணாமலை – உதயநிதி.. இந்த மும்முனை போட்டி தான் இனி தமிழக அரசியல்.. ஒருவர் சினிமா பிரபலம்.. இன்னொருவர் அதிரடி அரசியலுக்கு பிரபலம்.. மூன்றாமவர் வாரிசு அரசியலில் வந்தவர்.. மூவருக்கும் கிட்டத்தட்ட வயதில் கொஞ்சம் தான் வித்தியாசம்.. இளைஞர்கள் ஆதரவு யாருக்கு இருக்கும்? இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு? சபாஷ் சரியான போட்டி…

ஜூன் 3, 2026, 11:50
Government announcement that 75,000 youth will be employed in government jobs as announced by Stalin

சிறுபான்மையினர் ஓட்டு போயிருச்சு.. எல்லா கூட்டணி கட்சிகளும் துரோகம் செஞ்சிட்டு போயிட்டாங்க.. நாம மட்டும் எதுக்கு பாஜகவை எதிர்க்கனும்.. சிறுபான்மையினர் ஓட்டு போனால் என்ன? ஓபிசி ஓட் நோக்கி பயணம் செய்வோம்.. இனி பாஜகவுடன் தான் கூட்டணி.. ஒரே நேரத்தில் மத்திய அரசையும் மாநில அரசையும் எதிர்த்து அரசியல் செய்ய முடியாது.. மத்திய அரசுடன் கைகோர்ப்போம்.. அமைச்சர் பதவிகளையும் வாங்கி கொள்வோம்.. விஜய்யை ஈசியா சமாளிச்சிடலாம்.. திமுக மேலிடத்தின் திட்டம் இதுதானா?

ஜூன் 3, 2026, 11:38
vijay vs stalin4

திமுகவின் 10 முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்பிக்கள், முன்னாள் நிர்வாகிகள் என 50 பேர் தவெகவில் சேர ரெடியாக இருக்கிறார்கள்.. லிஸ்ட் முதல்வர் விஜய் டேபிளில் இருக்கிறது.. ஆனால் விஜய் முடியாது என்று சொல்லிவிட்டார்.. தவெக ஒன்னும் வாஷிங் மிஷின் கட்சி அல்ல.. தீய சக்தி கட்சியில் இருந்து யார் வந்தாலும் சேர்க்க வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார்..

ஜூன் 3, 2026, 07:58
vijay annamalai race

தீய சக்தி திமுகவோட கூட்டணியை துண்டு துண்டா உடைச்சாச்சு.. தீர்ந்து போன கட்சி இனிமேல் எழுந்திருச்சு வரவே முடியாது.. ஆனாலும் இப்போதைக்கு தவெகவுக்கு போட்டியே இல்லைன்னு நினைக்காதீங்க விஜய் சார்.. பின்னாடியே அண்ணாமலைங்கிற சிங்கம் ஒன்னு வந்துகிட்டு இருக்குது.. அவர் களத்துல இறங்கினா, உங்களுக்கு ஓட்டு போட்டவங்க பாதி பேர் அவருக்கு போட்ருவாங்க.. உங்க ஓட்டையெல்லாம் நீங்க காப்பாத்தனும்ன்னா, அதிரடி அரசியல் செய்யுங்க.. நல்ல முதல்வரா இருந்தா மட்டும் பத்தாது.. ராஜதந்திர கட்சி தலைவராகவும் இருக்கனும்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து…!

ஜூன் 3, 2026, 07:33
corruption politicians

அரசியல்ல நல்லவனுக்கு நல்லவனா இருந்தா மட்டும் பத்தாது சிஎம் விஜய் சார்.. கெட்டவனுக்கு கெட்டவனாகவும் இருக்கனும்… மக்கள் பணத்தை திருடின முன்னாள் அமைச்சர்களை கண்டுபிடிச்சு ஜெயில்ல போடுங்க.. லஞ்சம் வாங்குனா, என்னிக்காவது ஒருநாள் ஜெயிலுக்கு போவோங்கிற பயம் ஒவ்வொரு அரசியல்வாதியோட ஆழ்மனசுல பதியனும்.. எவ்வளவு வயசானவங்களா இருந்தால் பரிதாபம் பார்க்காதீங்க.. சொத்தெல்லாம் பறிமுதல் செய்து கஜானாவுல சேருங்க.. செய்வீங்களா சிஎம் சார்…

ஜூன் 3, 2026, 07:17
vijay vote

50 வருஷமா தமிழ்நாட்டுல கொலைகாரங்களை, கஞ்சா குடிப்பவர்களை, பெண்கள் மீது கைவைப்பவர்களை உருவாக்கிட்டு போயிருக்காங்க.. ஒரே நாளில் அவங்களை எல்லாம் விஷம் வச்சா கொல்ல முடியும்.. கொஞ்சம் கொஞ்சமாத்தான் திருத்தனும்.. முதல்ல போதையில் இருந்து தெளிய வைக்கனும்.. அப்புறம் அவங்களோட வருமானத்துக்கு வழிபண்ணனும், பெண்களை எப்படி மதிக்கனும்ன்னு கவுன்சிலிங் கொடுக்கனும்.. இதெல்லாம் நடக்க கொஞ்ச நாள் ஆகும்.. கொஞ்சம் பொறுங்க.. தமிழ்நாடு சொர்க்க பூமியா மாறும்…

ஜூன் 2, 2026, 19:23