2026ல் விஜய் சொல்லி அடிச்ச மாதிரி அண்ணாமலை 2031ல் சொல்லி அடிப்பார்.. விஜய்யை விட அண்ணாமலை கட்டமைப்பு வித்தியாசமாக இருக்கும்.. திமுக, அதிமுக மீதான வெறுப்பில் தான் மக்கள் விஜய்க்கு ஆதரவு அளித்தார்கள்.. விஜய் சிறந்த நிர்வாகி என்பதற்காக அல்ல.. ஆனால் அண்ணாமலை விஷயம் அப்படியல்ல.. படிப்பு, நிர்வாக திறமை, பொது அறிவு, அரசியல் அறிவு, உடனடியாக முடிவெடுக்கும் திறன், பத்திரிகையாளர்களை வச்சு செய்யும் திறமை, மக்கள் ஆதரவு எல்லாமே இருக்குது.. பாஜக அவரை மிஸ் செய்துவிட்டது.. தமிழக மக்கள் மிஸ் செய்ய மாட்டார்கள்.. அடுத்த முதல்வர் அண்ணாமலை தான்…ஜூன் 2, 2026, 19:05
எம்ஜிஆர் – கருணாநிதி போல்.. ஜெயலலிதா – ஸ்டாலின் போல்.. இனி தமிழ்நாட்டு அரசியல் விஜய் – அண்ணாமலை.. ஒருவர் பெரியார் ஆதரவாளர், இன்னொருவர் ஆன்மீக ஆதரவாளர்.. ஒருவர் சினிமாவில் பிரபலம், இன்னொருவர் ஐபிஎஸ் மூலம் பிரபலம்.. ஒருவர் அமைதியாக அரசியல் செய்வார், இன்னொருவர் அதிரடி அரசியல் செய்வார்.. ரெண்டு பேருக்கு இடையேதான் போட்டி.. ஒன்னு விஜய், இன்னொன்னு அண்ணாமலை.. அரசியல் களம் மாறுகிறது…ஜூன் 2, 2026, 16:31
இன்ஸ்டாகிராம் மூலம் எப்படி ஜெயிச்சாங்களோ, அதேபோல் இன்ஸ்டாகிராம் மூலம் அரசுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கவும் திட்டம் ரெடி.. ஒரு தொகுதிக்கு 10 இன்ஸ்டாகிராம் பக்கம்.. அந்த பக்கங்களில் தவெக அரசை பற்றிய போலி விமர்சனங்கள், வதந்திகள், பொய் குற்றச்சாட்டுக்களை தோலுரிக்கும் வேலை.. யார் அரசு மீது குற்றச்சாட்டு சொல்றாங்களோ, அவங்க பின்னணியை ஆராய்ந்து அவர் உபி என தெரிய வந்தால் வச்சு செய்வது.. ஆனால் அதே நேரத்தில் உண்மையான குற்றச்சாட்டை தலைமைக்கு கொண்டு செல்வது.. அடுத்த அதிரடி ஆரம்பம்.. இதையெல்லாம் அதிமுக, திமுக செய்யலாம்ன்னு நினைச்சு கூட பார்க்க முடியாது…ஜூன் 2, 2026, 15:57
விஜய் மக்கள் முன் தோன்றி 20 நிமிஷம் பேசுவார், அதன்பின் அவர் வேலையை பார்க்க சென்றுவிடுவார்.. மக்களும் வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள்.. ஆனால் காசுக்கு கூவும் அரசியல் விமர்சகர்கள் அதை வைத்து 20 நாட்கள் பிழைப்பை ஓட்டிவிடுவார்கள்.. 200 ரூபாய் உபிக்களுக்கு அதுதான் கண்டெண்ட், 24 மணி நேரமும் விஜய் பேசியதையே பேசுவார்கள்.. விஜய் ஏன் அதை பேசவில்லை, இதை பேசவில்லை என்ற புலம்பலும் இருக்கும்.. தமிழ்நாட்டு அரசியலை நன்றாக புரிந்து வைத்துள்ளார் விஜய்.. ஒரே ஒரு தீக்குச்சியை பற்ற வைத்துவிட்டு அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்தால் போதும்.. மொத்த வன்மமும் வெளியே வந்துவிடும்…ஜூன் 2, 2026, 14:42
சிங்கார சென்னை முதல் சிவகங்கை வரைக்கும் கம்பீரமா பெண்களை கலெக்டரா உட்கார வச்சிருக்கோம். பெண்களை வெறும் ஓட்டு வங்கியா மட்டும் பார்த்த காலம் எல்லாம் மலையேறிப்போச்சு! அவங்க வீட்டுக்குள்ள முடங்கி கிடக்குறவங்க இல்ல, இந்த நாட்டோட நிர்வாகத்தையே நிமிர்ந்து நின்னு நடத்த போறவங்க. அரியலூர் டூ வேலூர் வரைக்கும் 13 சிங்கப்பெண்களும் இன்னைக்கு களத்துல… இனிமேல் தமிழ்நாட்டோட ஒவ்வொரு மாவட்டமும் இவங்களோட அதிரடி ஆட்டத்தைப் பார்க்க போகுது!”ஜூன் 2, 2026, 14:27
தவெக + காங்கிரஸ் கூட்டணி அமைய இருந்ததை தடுத்ததே இதே ப சிதம்பரம் தான்.. கடைசி நேரத்தில் ஸ்டாலினை பார்த்து, காங்கிரஸ் மேலிடத்தை மிரட்டி திமுக கூட்டணியில் பங்கேற்க வைத்தவர்.. விஜய் முதல்வராக கூடாது என எப்படி ரஜினி, கமல் நினைத்தார்களோ, அதே எண்ணத்தை கொண்டவர் இவரும் தான்.. இவரை நம்பி ஏமாந்திராதீங்க முதல்வர் விஜய் அவர்களே.. இந்த ஊழல் குடும்பத்தை, வாரிசு அரசியலை எதிர்க்கும் நீங்கள் நம்பிடாதீங்க.. விஜய் – ப சிதம்பரம் சந்திப்பு குறித்து ஜென் ஸி எச்சரிக்கை..ஜூன் 2, 2026, 14:10
நம்ம கூட இருக்குறவங்கள நம்ம பாத்துக்கிட்டா… மேல இருக்குறவன் நம்மள பாத்துப்பான்!.. நேற்றைய திருச்சி முதல்வர் விஜய் கூட்டத்தில் வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வாழைமர தோரணங்கள்.. ஒன்று கூட பறிபோகாமல் கூட்டம் முடிந்த பின்னரும் அப்படியே இருந்தது.. இதுவே திமுக, அதிமுக கூட்டம் என்றால் வாழைத்தார்கள் காணாமல் போய்விடும்.. டீசண்ட் அரசியல்ன்னா என்னன்னு தவெககாரங்ககிட்ட கத்துக்கோங்கடா.. அதைவிட்டு சும்மா தற்குறி தற்குறின்னு புலம்பிகிட்டு…ஜூன் 2, 2026, 10:04
எறங்கிட்டோம்னா அடிக்கணும், ஜெயிக்கணும், ஜெயிச்சே ஆகணும்! கல்லூரியில் அட்மிஷனுக்கு மாணவரிடம் பணம் வாங்குவது இனி நடக்காது.. ஒரு பைசா கூட அதிகம் வாங்காமல் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வாங்க வேண்டும்.. இனி யாராவது டொனேஷன்னு வாங்கினா இந்த அரசு பாத்துகிட்டு சும்மா இருக்காது.. உயர்கல்விதுறை அமைச்சர் விஸ்வநாத் எச்சரிக்கை.. இப்படி ஒரு அறிவிப்பு எந்த திராவிட ஆட்சியிலாவது வந்ததுண்டா.. நீ வாங்குறதை வாங்கிக்கோ, எனக்கு சேர வேண்டிய கமிஷனை மட்டும் கொடுத்துருன்னு தான் அறிவிப்பு வந்திருக்கும்.. இனிமேல் எல்லாமே மாற்றம் தான்..ஜூன் 2, 2026, 08:36
பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல… விஜய் நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க தடை.. அவர்களுக்கு என்று ஒரு இடம் கொடுத்து, டிவி வசதி கொடுத்து, அங்கிருந்தே செய்தி சேகரித்து கொள்ள வேண்டும்.. மேடை அருகிலேயோ, விழா நடக்கும் இடத்திற்கோ செய்தியாளர்கள் வர முடியாது.. பத்திரிகையாளர்களை எள்ளளவும் மதிக்காத முதல்வர் விஜய்.. முடிஞ்சா தவெக செய்தியை இருட்டடிப்பு செஞ்சுக்கோங்க.. பத்திரிகைகள் நடுநிலையாக மாறும் வரை இந்த ஆட்சியின் 5 வருடங்களிலும் இதுதான் நடக்கும்..ஜூன் 2, 2026, 08:01
ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்… நாங்கள் கொத்தடிமைகள் என்பதில் பெருமை கொள்கிறோம்.. GenZ DMK மேடையில் பேசிய இளைஞர்.. இந்த ஆட்சியில் ஒரு தவறு நடந்தால் அதை நாங்கள் தட்டி கேட்போம்.. தவெகவுக்கு ஆதரவளித்த GenZ இளம்பெண்.. இதில் யார் உண்மையான GenZ? காலங்காலமாக கொத்தடிமையாக இருப்போம் என்பவரா? நாங்கள் ஆதரித்த அரசு என்றாலும் அதில் தவறு நடந்தால் கேள்வி கேட்போம் என்பவரா? முடிவை உங்கள் கையில் விட்டுவிடுகிறோம்…ஜூன் 2, 2026, 07:27