காங்கிரஸ் பங்கேற்கும் இந்தியா கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்.. திமுக அறிவிப்பு.. தேசிய அளவில் பாஜகவுக்கும் எதிர்ப்பு.. காங்கிரஸ்க்கும் எதிர்ப்பு.. கும்மிடிபூண்டியை தாண்டாத கட்சிக்கு இதெல்லாம் தேவையா? சிறுபான்மையர், தலித், பெண்கள் ஓட்டை இழந்தாச்சு.. இருந்த ஒரே ஆதரவான இந்தியா கூட்டணியையும் இழந்துட்டு அப்புறம் எப்படி அரசியல் செய்வீங்க.. மத்தியிலும் ஆட்சி இல்லை.. மாநிலத்திலும் ஆட்சி இல்லை.. கட்சி தலைவர் எம்.எல்.ஏ கூட இல்லை.. விரைவில் வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மேயர் பதவிகளும் பறிபோய்விடும்.. திமுகவை நினைச்ச கொஞ்சம் பாவமாத்தான் இருக்குது…ஜூன் 4, 2026, 18:34
நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது.. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்.. இனிமேல் சார்பதிவாளர் அலுவலகம் யாருக்கும் சார்ந்த அலுவலகமாக இருக்காது.. என்னப்பா இன்னைக்கு சுபமுகூர்த்த நாள், கூட்டம் அலைமோதுதுன்னு பப்ளிக் கிட்ட ‘கவர்’ வாங்க கணக்கு போட்டீங்களா? நீங்க டோக்கன் போட்டு லஞ்சம் வாங்க பிளான் பண்ணா… நாங்கள் டைம் பிக்ஸ் பண்ணி லாக் பண்ணுவோம்! நீங்க ஆபீஸ்க்குள்ள உட்கார்ந்து ‘கல்லா’ கட்டுறதுக்கு இது உங்க சொந்த கடை இல்லடா… அரசாங்க அலுவலகம், பாத்துக்கோங்க!ஜூன் 4, 2026, 18:15
எதிர்கால தமிழக அரசியலில் திமுக, அதிமுக ஆட்டத்திலேயே இருக்காது.. இளைஞர்கள் ஓட்டு 40% வந்துருச்சு.. இவர்கள் ரெண்டு கட்சிக்கும் போட மாட்டார்கள்.. கோர் ஓட்டும் சிதைஞ்சிருச்சு.. ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி அரசியல் இனி எடுபடாது.. விஜய் நல்லாட்சி கொடுத்தால் அவரை மீண்டும் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.. இல்லையென்றால் இருக்கவே இருக்குது அண்ணாமலை என்ற இன்னொரு ஆப்ஷன்.. திராவிடம் கதை முடிந்தது.. இனிமேல் விஜய் அண்ணாமலை தான் போட்டி.. அண்ணாமலைக்கு முன் விஜய் தாக்கு பிடிப்பாரா? காலம் தான் பதில் சொல்லனும்…ஜூன் 4, 2026, 15:25
விஜய் மட்டுமல்ல, இனிவரும் எல்லா முதல்வர்களும் மீடியாவை சந்திக்க மாட்டார்கள்.. இது ஒன்னும் 80கள், 90கள் இல்லை.. மீடியா இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்பதற்கு.. எனக்கு டெக்னாலஜி இருக்குது.. இன்ஸ்டாவுல ரீல்ஸ் போடுவேன்.. யூடியூப் லைவ்ல்ல மக்களை நேரில் சந்திப்பேன்.. ட்விட்டரில் எங்க திட்டங்களை விலாவரியா போட்டுக்குவேன்.. மீடியா எதற்கு எனக்கு? நீங்க எங்களுக்கு வேண்டாம்.. நீங்க யாரு பணம் கொடுக்குறாங்களோ அவங்களுக்கு ஜால்ரா போட்டு உங்க பிழைப்பை ஓட்டிக்கோங்க.. இனி எதிர்கால அரசியல் இதுதான்..ஜூன் 4, 2026, 14:59
தனிக்கட்சி ஆரம்பிக்கலாமா? வேண்டாமா? இந்த முடிவை எடுப்பதிலேயே திணறும் அண்ணாமலை.. எதற்காக மோடியிடமும் அமித்ஷாவிடமும் போய் கட்சி ஆரம்பிக்க அனுமதி கேட்கனும்? ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு கட்சி அறிவிப்பை வெளியிட வேண்டியதுதானே? கட்சி ஆரம்பிக்க போறேன்னு பயமுறுத்தி பதவி வாங்க திட்டமா? அப்படியே கட்சி ஆரம்பிச்சாலும் வந்து பாருங்க சார்.. விஜய் முன்னாள் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது.. 60 வருஷ திராவிடத்தையே வீழ்த்தியவர் எங்கள் விஜய்.. 6 வருஷ அண்ணாமலையை வீழ்த்த முடியாதா? தவெக தொண்டர்கள் ஆவேசம்…ஜூன் 4, 2026, 11:59
தவெக தோழர்களே.. எல்லா பக்கத்துல இருந்தும் நம்மை நோக்கி அட்டாக் வருதேன்னு யாரும் பதறாதீங்கப்பா! நாலா பக்கமும் அம்புகள் வருதுன்னா… நாம சரியான பாதையில போயிட்டு இருக்கோம்னு அர்த்தம்! அவங்க கத்துறதுக்கு பதில் சொல்றது மட்டும் நம்ம வேலை இல்ல… இந்தத் தவெக அரசு மக்களுக்கு என்ன செய்யுதுன்றதை வரலாறா மாத்துறதுதான் நம்மோட உண்மையான வேலை! நம்ம சாதனையைத் தூக்கிப் பிடிங்க… அவங்க வச்ச அத்தனை புகார்களும் தானாவே பொடிப் பொடியாகிடும்!ஜூன் 4, 2026, 11:40
அலிசா அப்துல்லா குறித்து ஆபாச பேச்சு – திருச்சி சூர்யா சிவா கைது…. YouTuber முக்தாருக்கு போலீசார் வலை.. தலைமறைவு என தகவல்.. இனிமேல் ஜென்மத்துக்கும் இந்த ரெண்டு பேரும் பெண்கள் குறித்து ஆபாசமாக பேச விடக்கூடாது.. திருச்சி சூர்யா சிவா, பலமுறை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியுள்ளார். இவர் பேட்டி கொடுக்கும்போது சொல்பவற்றில் 99% பொய் தான்.. அதனால் தான் இவரை கட்சியில் இருந்து அண்ணாமலை விரட்டியடித்தார். நீ என்ன பேசுனாலும் கண்டுக்காம இருக்க இது திராவிட மாடல் அரசு இல்லை.. பெண்களை தவறாக பேசினால் உலுக்கெடுக்கும் தவெக அரசுஜூன் 4, 2026, 11:29
தலைவனுக்கும் தொண்டனுக்கும் நடுவுல ஊடகங்கள் எதுக்கு? காலம் மாறிடுச்சு… இங்க டிஜிட்டல் புரட்சி வந்துடுச்சு! மக்களோட நாடித் துடிப்பு முதல்வர் விஜய் விரல் நுனியில இருக்கு. அப்புறம் எதுக்கு அவர் ஊடகங்களில் பேசணும்? கட் பண்ணி எடிட் பண்ற உங்க கேமரா அவருகு தேவை இல்ல, எதை சொல்றதா இருந்தாலும் மக்களிடம் அவர் நேரடியா சொல்லிக்கிடுவாரு.. ஜனநாயகத்தோட நாலாவது தூண்ல நேர்மைங்கிற சிமெண்ட்டை விட, காழ்ப்புணர்ச்சிங்கிற கறைதான் ஜாஸ்தி ஒட்டியிருக்குஜூன் 4, 2026, 08:17
விஜய்யை அவ்வளவு சீக்கிரம் மக்கள் வெறுக்க மாட்டார்கள்.. கொடுங்கோல் ஆட்சி செய்த ஜெயலலிதாவையே மீண்டும் ஆட்சியில் அமர்த்தியவர்கள் தமிழக மக்கள்.. நல்லாட்சி தரும் விஜய்யை கொண்டாடி தீர்த்துவிடுவார்கள்.. விஜய் குறித்து பேசி பேசியே எதிர்க்கட்சிகள் அவரை ஆட்சியில் உட்கார வைத்துவிட்டது.. இப்போது மீண்டும் விஜய்யை பேசி பேசி தங்கள் இமேஜை டேமேஜ் ஆக்கி கொள்கின்றன..ஜூன் 4, 2026, 07:21
எதிர உள்ளவன் டீசண்ட் அரசியல் செஞ்சா நாமளும் டீசண்ட் அரசியல் செய்யலாம்.. எதிர உள்ளவன் கேடு கெட்ட அரசியல் செஞ்சா நாமளும் தரைமட்டத்துல இறங்கி தான் அரசியல் செய்யனும்.. நீதி, நேர்மை, ஜனநாயகம் எல்லாம் பேசிகிட்டு இருக்க முடியாது.. அரசியலில் வெற்றி, பெற்ற வெற்றியை தக்க வைப்பது.. இதுதான் முக்கியம்.. எதிரிகளை வீழ்த்துவதில் பாவ புண்ணியமே பார்க்க கூடாது.. அரசியல்ல நல்லவங்களா இருக்கலாம், அது மக்களுக்கு மட்டும் தான்.. அரசியல்வாதிகளுக்கு நல்லவங்களா இருக்க வேண்டிய அவசியம் இல்லை.. இதை தவெக தலைவரா விஜய் புரிஞ்சிகிடனும்…ஜூன் 3, 2026, 21:20