தற்போது எண்ணிலடங்கா வேலை வாய்ப்புகள் பெருகி வரும் நிலையில் தகுதிக்கேற்ற பணியாட்களைத் தேர்வு செய்வதைக் காட்டிலும், திறமையான பணியாள்களைத் தான் நிறுவனங்கள் தேர்வு செய்ய விரும்புகின்றன. தங்களது கல்வித் தகுதி, தனித்திறன்கள் மூலம் வேலை வாய்ப்பினைப் பெற்று வாழ்க்கையில் ஜொலிக்க மெகா வேலை வாய்ப்பு முகாம் மதுரையில் அரசு சார்பில் நடைபெற உள்ளது.
மதுரை மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து இந்த மெகா வேலை வாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. வருகிற சனிக்கிழமை அதாவது 14.12.2024 அன்று மதுரை அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள மதுரை சமூக அறிவயல் கல்லூரியில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
காலை 9 முதல் நடைபெற இருக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன. மொத்தம் 10,000 அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு சுமார் 200 நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களைத் தேர்வு செய்கின்றன. இம்முகாமில் 8-ம் வகுப்பு முதல் டிகிரி வரையும், ஐடிஐ, பொறியியல், பாலிடெக்னிக், நர்சிங், கேட்டரிங், பார்மஸி, டெய்லர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களும் பங்கு பெறலாம்.
மேலும் இந்த முகாமில் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பிக்கத் தேவையான வழிமுறைகளும் செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் திறன் சார்ந்த தொழில்களுக்குத் தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது. இதுமட்டுமன்றி அயல்நாட்டு வேலைவாய்ப்பு குறித்த பதிவு உள்ளிட்ட தகவல்களும் இங்கே பரிமாறப்படும். இதில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் கிடையாது. முற்றிலும் இலவசமே. இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இளைஞர்களே இந்த அரிய வாய்ப்பினை மிஸ் பண்ணிடாதீங்க..!