தேர்வு நெருங்குகிறது

By Staff

Published:

இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவாகவே உள்ளது அனைத்து மாணவர்களும் அந்தந்த ஆண்டு தேர்வை எழுதுவதற்கு.

அடுத்த வகுப்புக்கு செல்லவோ அல்லது கல்லூரிக்குள் நுழையவோ மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. மதிப்பெண்களை நோக்கி ஓடும் ரேஸ் குதிரையாக ஆக்கப்பட்டு இருந்தாலும் கூட இன்று வேறு வழியில்லாமல் அந்த போட்டாபோட்டியில் பங்கெடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

மாணவர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சனை என்னவென்று பார்த்தால் ஞாபக மறதி. படித்த விஷயங்கள் எல்லாமே மறக்காது என்றாலும் தேர்வு எழுதிக்கொண்டே வரும் போது திடிரென எதோ ஒரு இடத்தில் ஏதாவது ஒரு விஷயம் மறந்து விட்டால் அடுத்தடுத்து எழுதவேண்டிய விடைகளில் ஒரு குழப்பம் ஏற்படும்.

சில உதவிக்குறிப்புகள்

  1. எல்லாவற்றையும் மனப்பாடம் செய்ய வேண்டாம். தேவையானவற்றை சிறு சிறு குறிப்புகளாகவோ அல்லது உங்களுக்கு அது எப்படி இருந்தால் அதை ஞாபகத்தில் இருக்கும்படி வைத்துக்கொள்ள முடியுமோ அதே போன்று பிரித்துக் கொள்ளவும். இப்போது ஒரு எடுத்துக்காட்டாக :

db3ce6d52bef3649ed2c80f234f00f36

ஒரு பத்தியை முழுவதும் மனப்பாடம் செய்ய வேண்டும் என்றால் அதில் உள்ள கருத்தை மட்டும் தனியே பிரித்து எழுதிக் கொள்ளவும். பின்னர் அதற்கு பொருந்த கூடிய வகையில் எதேனும் இணைப்பாக ஒரு வார்த்தை, அல்லது பொருள், ஏன் ஒரு சினிமாபாடல், ஒரு வசனம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், உங்க அப்பா அம்மா பெயர் கூட இருக்கலாம். இந்த முறைக்கு பெயர்- காட்சிப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் முறை. இப்போது நீங்கள் ஏதேனும் ஒரு சினிமா பாடலை உங்கள் பாடப்பகுதியோடு இணைத்து படித்தால் அந்த சினிமா பாடல் வரி நினைவுக்கு வரும்போதெல்லாம் அந்த பாடப்பகுதியும் நினைவுக்கு வரும்.

இதுபோன்று ஆரம்பத்தில்  இருந்தே படித்து வரும்போது படிக்க வேண்டிய பாடப்பகுதி எளிமையாக உங்களுக்கு விளங்கும். சில சமயம் மனப்பாடம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தாலும் கூட அது ஒரு எளிமையானதாக மாறி விடும்.

0353f64fbc0b5630a7e5d3161bcefe6d

அடுத்து,

தொடரும்……..

Leave a Comment