தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியுடையவர்கள் இன்று முதல் வரும் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு…

Cooperative Interns on 1 year contract basis for TNSC Bank and 23 District Cooperative Banks

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியுடையவர்கள் இன்று முதல் வரும் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி , டிஎன்சி வங்கி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. 1905 இல் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டுறவு வங்கி நிறுவனமாகும் . நகர்ப்புற கூட்டுறவு வங்கியாக இணைக்கப்பட் வங்கியுடன் இணைந்து தமிழகம் முழுவதும் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் எல்லா மாவட்டங்களிலும் உள்ளன,

இந்நிலையில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 24 பணியிடங்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் 23 பணியிடங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும் ஒரு பணியிடம் டிஎன்எஸ்சி வங்கியிலும் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: எம்பிஏ அல்லது அதற்கு சமமான படிப்பு, மார்க்கெட்டி மேனேஜ்மெண்ட், கோ ஆப்ரேட்டிவ் மேனேஜ்மெண்ட், அக்ரி பிசினஸ் மேனேஜ்மெண்ட், ரூரல் டெவலப்மெண்ட் மேனேஜ்மெண்ட் ஆகிய பாடங்களில் முதுக்கலைப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேநேரம் கல்வியை 10+2+3+2 அல்லது 10+2+4+2 என்ற வகையில் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் 23 மாவட்டங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.25000 (நிலையானது) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கூட்டறவு வங்கியில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf9NeeGH9OzHKNQaVS33N–GrLAweW12jDIMyXc6OgNfDqfgw/viewform இந்த லிங்க் மூலம் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்-

தகுதியானவர்களுக்கு நேர்காணல் அழைப்பு வரும். மேலும் விவரங்களுக்கு https://www.acstitnsc.in/careers/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். சந்தேகம் உள்ளிட்ட விவரங்களை அறிய 044-25302354 என்ற தொலைப்பேசி எண்ணில் அழைக்கலாம்.