50 வருடங்களுக்கு முன்பே ஒற்றுமையை வலியுறுத்திய படம்… பாரத விலாஸ்!

தற்போது இந்தியா என்ற நாட்டை பாரத் என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்பே சிவாஜி கணேசன் நடித்த திரைப்படத்தின் டைட்டிலாக ’பாரத விலாஸ்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்திய ஒருமைப்பாட்டை பாமர மக்களிடமும் கொண்டு போய் சேரும் வகையில் இந்த படம் அமைந்தது.

கடந்த 1973 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி பாரத விலாஸ் திரைப்படம் வெளியானது. ஏசி திரிலோகசந்தர் இயக்கத்தில், எம்எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான இந்த படத்தில் தமிழ் சினிமாவில் உள்ள ஒரு மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்து இருந்தார்கள்.

சிவாஜிகணேசன், கேஆர் விஜயா, மேஜர் சுந்தரராஜன், தேவிகா, விகே ராமசாமி, ராஜ சுலோசனா, எம்ஆர்ஆர் வாசு, மனோரமா, சிவகுமார், ஜெயசுதா, ஜெயசித்ரா, சசிகுமார், எஸ்பி ராமதாஸ், சந்திரபாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர்.

சிவாஜியின் நவராத்திரி படத்தை வைத்து தான் எம்.ஜி.ஆருக்கு நவரத்தினம் படம் எடுத்த இயக்குனர்..

bharatha vilas1

அதுமட்டுமின்றி பிரபல தெலுங்கு நடிகர் அக்னி நாகேஸ்வரராவ், ஹிந்தி நடிகர் சஞ்சீவ் குமார், மலையாள நடிகர் மது ஆகியோர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்கள். இந்த படம் தேசிய ஒருமைப்பாடு, மதச்சார்பின்மை மற்றும் நாட்டின் ஒற்றுமை ஆகியவற்றை குறிக்கும் வகையில் கதை அம்சம் கொண்டிருக்கும்.

ஒரு மிகப்பெரிய பங்களாவில் நான்கு குடும்பங்கள் தங்குவார்கள். அவர்களில் தமிழர்களான சிவாஜி கணேசன் – கே ஆர் விஜயா, பஞ்சாப் சிங் மேஜர் சுந்தரராஜன் – தேவிகா, இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த விகே ராமசாமி மற்றும் ராஜ சுலோசனா, மலையாள குடும்பத்தை சேர்ந்தவர்களாக எம்ஆர்ஆர் வாசு – மனோரமா ஆகியோர் நடித்திருப்பார்கள்.

இந்த நான்கு குடும்பங்களும் ஒற்றுமையாக இருக்கும் நேரத்தில் வரும் திடீர் சிக்கல், அவர்கள் குடியிருக்கும் வீட்டையே வாங்க வேண்டிய நிலைமை, அப்போது ஒருவரிடம் மட்டும் பணம் இல்லாததை அறிந்து மற்றவர்கள் உதவுவது, ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சினையை பார்த்து மற்ற மூன்று குடும்பமும் உதவிக்கு முன் வருவது என சென்டிமென்ட், ரொமான்ஸ், சண்டை காட்சிகள் உள்பட பல்வேறு வகையான அம்சங்களை இந்த படத்தில் இயக்குனர் புகுத்தி இருப்பார்.

“இருவர் உள்ளம்” வெற்றிக்கதை….. இதில் சிவாஜி அம்மா யார் தெரியுமா…..?

சிவாஜி கணேசன் ஒரு அப்பாவி கேரக்டரில் அதே நேரத்தில் தேசப்பற்று மிக்க ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். அவ்வப்போது அவருடைய மனசாட்சியும் நடித்திருக்கும். பஞ்சாப் சிங் கேரக்டரில் மேஜர் சுந்தராஜன் கம்பீரமாக நடித்திருப்பார் அவருக்கு தேவிகா ஜோடியாக நடித்தது தான் ஆச்சரியம்.

bharatha vilas2

அதேபோல் மலையாள தம்பதிகளாக வரும் எம்ஆர் ராதா மற்றும் மனோரமா, இஸ்லாமிய ஜோடியாக வரும் விகே ராமசாமி மற்றும் ராஜ சுலோசனை அருமையாக நடித்திருப்பார்கள். விகே ராமசாமி இந்த படத்தில் காமெடியாக மட்டுமின்றி தன்னால் சென்டிமென்ட் காட்சியிலும் அசத்த முடியும் என்பதை நிரூபித்து இருப்பார். இந்த படத்தில் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் நான்கு பாடல்கள் இடம்பெற்று இருக்கும்.

சிவாஜி தங்கையாக ஸ்ரீதேவி.. அந்த காலத்திலேயே ஒரு ‘புதிய பாதை’..!

இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் இந்த படம் 100 நாள் ஓடி சக்கை போடு போட்டது. இந்த படம் தமிழில் சிறந்த படமாகவும் சிறந்த இயக்குனராக திரிலோக்சந்தர் அவர்களுக்கும் பிலிம் பேர் விருது கிடைத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...