தனுஷ் என்னை பழிவாங்கிட்டாரு… கீதாஞ்சலி வந்த பின்பு தான் வாழ்க்கையே வந்திருக்கு… குடும்பத்தைப் பற்றி பகிர்ந்துக் கொண்ட செல்வராகவன்…

தனுஷ் அவர்களின் சகோதரர், தமிழ் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர் செல்வராகவன் ஆவார். 2002 ஆம் ஆண்டு ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

தனது இளைய சகோதரனான தனுஷை வைத்து 2003 ஆம் ஆண்டு ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தின் மூலமாக தான் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினர் தனுஷ். செல்வராகவன் அவர்களுக்கும் இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது.

அதைத் தொடர்ந்து 7G ரெயின்போ காலனி (2004), புதுப்பேட்டை (2006), ஆயிரத்தில் ஒருவன் (2010), மயக்கம் என்ன (2011), இரண்டாம் உலகம் (2013) ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2002 ஆம் ஆண்டு வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் மூலமாக செல்வராகவன் நடிகராக அறிமுகமானார்.

தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்ட செல்வராகவன் அவர்களிடம் குடும்பத்தை பற்றி பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது, குறிப்பாக அவர் மனைவி கீதாஞ்சலி பற்றியும், சகோதரர் தனுஷ் அவர்களைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டது.

முதலில் தன் மனைவி கீதாஞ்சலி பற்றி பேசிய செல்வராகவன், என் மனைவி கீதா வந்த பிறகுதான் எனக்கு வாழ்க்கையே வந்தது, எங்கள் குடும்பத்தில் என்ன விஷேஷம் வந்தாலும் ஓடிப் போய் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வார். என் கஷ்ட காலங்களில் சிங்கம் மாதிரி எனக்கு துணையாக இருந்தவர் கீதா தான் என்று தன் மனைவியை புகழ்ந்து பேசியுள்ளார்.

அடுத்ததாக, தனுஷ் அவர்களைப் பற்றி பேசுகையில், நான் படம் இயக்கி அவரை நடிக்க வைத்தேன், இப்போது அவர் படம் இயக்குகிறார் நான் நடிக்கிறேன். நான் இயக்குனராக இருக்கும் போது அவரை திட்டியிருக்கிறேன். அதற்கு எல்லாம் சேர்த்து இப்போது தனுஷ் ‘ராயன்’ படத்தின் மூலம் பழிவாங்கி விட்டார். தல கீழ கட்டி இரண்டு மணி நேரம் தொங்க விட்டுட்டார் என்று கலகலப்பாக பதிலளித்துள்ளார் செல்வராகவன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...