நாள் முழுக்க மெட்டுப் போட்ட தேவா..ஒரே வார்த்தையில் வேண்டாம் என்ற பிரபுதேவா.. சூப்பர்ஹிட் பாடலின் பின்னணி!

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் பெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் அனிருத் இசையில் பின்னனி இசை பேசப்பட்டாலும், ‘நான் ரெடிதான் வரவா..’ என்ற பாடலைத் தவிர மற்ற பாடல்கள் என்னவோ சில நாட்களில் மனதை விட்டு மறைந்து விட்டன. ஆனால் லியோவில் அனிருத் இசையில் பேசப்பட்ட பாடல்களை விட மற்ற இசையமைப்பாளர்கள் இசையில் இடம்பெற்ற பழைய பாட்டுக்கள் ஏற்கனே ஹிட் ஆன போதிலும் லியோவில் இடம்பெற்று மீண்டும் வைரலானது.

அந்த இரண்டு பாடல்கள் தான் பசும்பொன் திரைப்படத்தில் இடம்பெற்ற தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும்.. பாடலும், ஏழையின் சிரிப்பில் படத்தில் இடம்பெற்ற கரு கரு கருப்பாயி.. என்ற பாடலும் ஆகும். இந்த இரண்டு பாடல்களும் வெளிவந்த காலங்களில் பெற்ற வெற்றியை விட தற்போது அதிக வெற்றி பெற்றது. இதில் கரு கரு கருப்பாயி பாடலுக்கு தேவா இசையமைத்திருப்பார்.

இந்தப் பாடல் பதிவு நேரத்தில் நடந்த சம்பவம் பற்றி இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்தப் பாடலுக்காக இயக்குநர் கே.சுபாஷ் வரிகளை எழுத காலை 9 மணிக்கு ஆரம்பித்த ரிதம் அமைக்கும் பணி மாலை வரை நீண்டுள்ளது. இந்தப் பாடல் பதிவிற்காக நாள் முழுக்க தேவா மெட்டுப் போட்டு அதிர வைக்கும் இசையில் பதிவு செய்து வைத்திருந்தாராம்.

எனக்கு இப்படியும் மியூசிக் போட தெரியும் என உணர்த்திய இயக்குநர்.. இளையராஜா பாராட்டிய இயக்குநர் இவரா?

மாலை பிரபுதேவா வந்து பாடலைக் கேட்டுள்ளார். பாடலில் ஏதோ ஒரு திருப்தியின்மை இருக்க, மீண்டும் பாடலைக் கேட்டுள்ளார். அப்போது அவருக்கு ஏதோ தோன்ற, உடனே தேவாவிடம், “சார்.. இந்தப் பாடலுக்கு இவ்வளவு இசை தேவையா..? வெறும் இதுபோன்ற மெட்டுக்கள் இருந்தாலே சூப்பர் ஹிட் ஆகும்” என்று சில திருத்தங்களைக் கூற, தேவாவும் அதை ஏற்று பாடலில் இசையைக் குறைத்து பிரபுதேவா கேட்டபடி போட்டுக் கொடுத்துள்ளார்.

பின் அந்தப் பாடல் ஷுட்டிங் நடைபெற்றது. பிரபுதேவா வழக்கம் போல் தனது நடனத் திறமையைக் காட்ட பாடல் ஹிட் ஆனது. ஆனால் அப்போது அந்தப் பாடல் பெற்ற வெற்றியை விட 24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பெற்ற வெற்றியால் உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது. இந்தப் பாடலை உன்னிமேனன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் பாடியிருப்பர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...