கமல் ஆபிஸில் தயரான தயாரான ‘வில்லன்’, கமலுக்காக எழுதப்பட்ட ‘வரலாறு’ கதை.. இரண்டிலும் அஜீத் இணைந்து வெற்றியைக் கொடுத்த கதை..

நடிகர் அஜீத்துக்கு திரை வாழ்க்கையில் பெரிய வெற்றியைக் கொடுத்த படங்கள் வில்லன் மற்றும் வரலாறு. இந்த இரண்டு படங்களின் இயக்குநரும் கே.எஸ்.ரவிக்குமார் தான். இந்த இரண்டு படங்களிலுமே கமல்ஹாசன் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றால் வியப்பாக இருக்கிறதா? இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அப்போது பஞ்சதந்திரம் திரைப்படத்தினை மும்முரமாக இயக்கிக் கொண்டிருந்த தருணம் அது.

அப்போது அவரை அஜீத் படங்களின் ஆஸ்தான தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி சந்தித்து, “அஜீத்தின் தேதி உள்ளது எனவே இப்போது ஒரு படம் எடுக்கலாம். தீபாவளி ரிலீஸ் செய்யலாம் என்று கூற, கே.எஸ்.ரவிக்குமார் இப்போது கதை எதுவும் இல்லையே என்று கூறியிருக்கிறார். தயாரிப்பாளர் சக்கரவர்த்தி உடனே கதையை தயார் செய்யுங்கள் என்று கூற, அப்போது பஞ்சதந்திரம் கதை விவாதத்திற்காக யூகி சேது, கமல், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் கமல் அலுவலகத்தில் தினசரி கூடுவது வழக்கம்.

எனவே அந்த தருணத்தில் சக்கரவர்த்தியும் கூற, யூகி சேது அஜீத்துக்காக ஒரு கதையை சொல்லியிருக்கிறார். இந்தக் கதையை தயாரிப்பாளர், அஜீத் ஆகியோருக்குப் பிடித்துப் போக உடனே வில்லன் பட ஷுட்டிங் ஆரம்பமானது. அடுத்த 5 மாதத்தில் மொத்த படமும் முடிந்து ரிலீஸ் ஆகி பெரிய வெற்றி பெற்றது. இரட்டை வேடத்தில் இதில் அஜீத் கலக்கியிருப்பார்.

இதனையடுத்து மீண்டும் கே.எஸ்.ரவிக்குமார் அஜீத் படம் ஒன்றை இயக்கினார். முதல் படத்தில் இரட்டை வேடங்களில் அஜீத்தை இயக்கியவர் இந்த முறை மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தார். வரலாறு படம் மிகப்பெரிய வரலாற்று வெற்றியைப் பெற்றது. இதற்கு முன் வரலாறு படக் கதையை கமலுக்காக ஹேராம், தெனாலி படம் நடித்துக் கொண்டிருந்த வேளையில் கே.எஸ்.ரவிக்குமார் சொல்லி வைத்திருந்தார். ரஜினியும் இந்தப் படத்திற்கு மதனா என்று பெயரிட்டார்.

கதையைக் கேட்டு கழுவிக் கழுவி ஊற்றிய பிரபல ஹீரோ.. இயக்குநர் எடுத்த முடிவால் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சூப்பர் எண்டர்டெயின்ட் ஹீரோ..

பின்னர் இந்தப்படம் காட்ஃபாதர் என்ற தலைப்பில் உருவாகி, அதன்பின் வரலாறு என்றானது. இந்த தருணத்தில்தான் ஏ.ஆர்.முருகதாஸின் கஜினி வாய்ப்பு அஜீத்துக்கு வந்திருக்கிறது. ஆனால் கஜினியில் மொட்டை அடிக்க வேண்டும் என்பதால் அப்போது வரலாறு படத்திற்காக அதிக முடி வளர்த்து இருந்திருக்கிறார். எனவே கஜினி படத்தில் நடிக்க இயலாமல் போனது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...