எனக்கு இப்படியும் மியூசிக் போட தெரியும் என உணர்த்திய இயக்குநர்.. இளையராஜா பாராட்டிய இயக்குநர் இவரா?

தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாது இசை உலகில் இளையராஜாவின் இடம் என்பது சிம்மாசனம் போன்றது. எம்.எஸ்.வி., இளையராஜாவிற்கு அடுத்ததாக இன்றுவரை அந்த இடத்தை நிரப்புவதற்கு வேறு எந்த இசையமைப்பாளரும் வரவல்லை என்று சொல்லலாம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என்பது தனி பரிணாமம் அது மேற்கத்திய இசையுடன் உலக அரங்கில் கவனிக்க வைப்பது.

ஆனால் தமிழர்களின் உணர்வோடு, மண் வாசத்தோடு, கிராமிய பண்பாட்டோடு இசையமைத்த இளையராஜா ஒன்பது வகையான நவரசங்களையும் தன் இசை வழியாகக் கடத்தி உணர்வுகளோடு ஒன்ற வைத்து ரசிகர்களை உணர்ச்சிப் பூர்வமாக்குவதில் அவருக்கு நிகர் அவரே.. இப்படி படிக்காத பாமரனையும் இசை எனும் ஆயுதத்தால் தன்வசப்படுத்தி வைத்திருக்கும் இளையராஜாவுக்கு மேற்கத்திய பாணியில் இசையமைக்க வரும் என்பதையும் தனது படத்தின் வழியாக நிரூபித்துக் காட்டியவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.

இயக்குநர் GVM, தனது படங்களுக்கு பெரும்பாலும் ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மானையே இசையமைக்க வைத்திருப்பார். இவரது படங்களில் பாடல்கள் பெரிதாகப் பேசப்படும். குறிப்பாக GVM படங்களில் கவிஞர் தாமரையே பெரும்பாலான பாடல்களை இயற்றியிருப்பார். மேலும் ஆங்கில வார்த்தைகள் இல்லாது தமிழ் வார்த்தைகளால் அற்புதமான பாடல்களை இயற்றி ரசிகர்களை மெய்மறக்க வைத்திருப்பார். இந்நிலையில் இயக்குநர் GVM நீதானே என் பொன்வசந்தம் படத்தை இயக்கும் போது அதற்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணி முதன் முறையாக அவரிடம் கேட்டிருக்கிறார்.

பக்கத்து ரூமில் கேட்ட பயரங்கர பாட்டு சத்தம்.. தமிழ் சினிமாவின் அடுக்குமொழி நாயகன் டி.ராஜேந்தர் அடியெடுத்து வைத்த வரலாறு!

சாதாரணமாக இளையராஜா இயக்குநர்கள் கதை சொல்ல வரும் போது முடியும், முடியாது என்பதை அந்த கணமே சொல்லிவிடுவார். அப்படித்தான் இயக்குநர் பார்த்திபன் தனது முதல்படமான புதிய பாதை படத்திற்காக இசையமைக்கக் கேட்ட போது, அப்போது முடியாது என்று கூறியிருக்கிறார். ஆனால் அதன்பின்பு அவரது பல படங்களுக்கு இசையமைத்தார்.அதேபோல் தான் GVM டீன் ஏஜ் காதல் கதை என்று இளையராஜாவிடம் சொல்லிய போது உடனே இசையமைக்க ஒப்புக் கொண்டார்.

சாதாரணமாக கௌதம் மேனன் படங்களில் பாடல்கள் மேற்கத்திய பாணியில் ஸ்டைலிஷாக இருக்கும் என அறிந்த இளையராஜா அதேபோல் பாடல்கள் இருக்க வேண்டும் என நினைத்து அவருக்கு ஏற்றாற் போல பாடல்களுக்கு டியூன் போட்டுள்ளார். இதனைக் கேட்ட GVM இளையராஜாவிடமிருந்து இப்படி ஓர் இசையா என வியப்பில் ஆழ்ந்துள்ளார். ஒருமுறை இளையராஜாவே இதுபற்றிக் குறிப்பிடும் போது எனக்கு இவ்வாறும் இசையமைக்கத் தெரியும் என்பதைக் கண்டுபிடித்தவர் GVM என்று அவரைப் பாராட்டியுள்ளார். மேலும் அதுவரை தன் படங்களில் தாமரையை பாடல் எழுத வைத்த GVM இளையராஜாவின் விருப்பப்படி நா.முத்துக்குமாரை எழுத வைத்தார்.

படத்தில் 8 பாடல்கள் இடம்பெற்றன. 2012-ல் வெளியான சிறந்த ஆல்பங்களில் நீ தானே என் பொன்வசந்தம் பெரிதும் வெற்றியைப் பெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...