டிரஸ்ஸை மாற்றி வரச் சொன்ன பிரபல நடிகை.. பேட்டியில் கடுப்பான டிடி..

சினிமா நடிகர் நடிகைகளைக் காட்டிலும், நாம் தினந்தோறும் டிவியில் பார்க்கும் முகங்கள் ஏராளம். தினந்தோறும் அவர்களைப் பார்க்கும் போது ஒருகட்டத்தில் நமது குடும்ப உறுப்பினர்கள் போலவே மாறிவிடுவர். அப்படி இல்லங்கள் தோறும் தினந்தோறும் டிவி ஷோக்களில் பங்கேற்று துறு துறு பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்தவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. டிடி என ரசிகர்களாலும், மீடியா உலகத்திலும் அன்புடன் அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனது 10 வயது முதல் மீடியா உலகத்தில் இருந்து வருகிறார்.

சன்டிவியில் ஒளிபரப்பான சிறுவர் ஷோ ஒன்றில் முதன்முதலாகப் பங்கேற்று அப்பொழுதிருந்தே தனது தொகுப்பாளினி பணியைத் தொடங்கியுள்ளார். மேலும் கல்லூரிப் படிப்பினை முடித்து எம்.பில் பட்டம் வாங்கி பேராசிரியையாகவும் பணிபுரிந்து வரும் திவ்யதர்ஷினி பேட்டி எடுக்காத பிரபலங்களே இல்லை என்று கூறலாம். தமிழ், தெலுங்கு, இந்தி என சினிமா பிரபலங்களையும், அரசியல் பிரபலங்களையும், சமூகப் பிரபலங்களையும் அவர்களின் பெர்சனல் பக்கங்களை ஜாலியாகப் பேசி பேட்டி எடுப்பவர்.

சன்டிவிக்குப் பின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இன்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதில் காஃபி வித் டிடி, சூப்பர் சிங்கர், ஜோடி நம். 1, பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

பல பிரபலங்களைப் பேட்டி எடுத்த டிடி-க்கு ஒரு பிரபலத்தை பேட்டி எடுக்கும் போது அவரின் செயல் இவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னனி நடிகை ஒருவரை பேட்டி எடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்த நிலையில், அவர் வர தாமதம் ஆனது. அந்த நேரத்தில் வேறொரு பேட்டியை முடித்த டிடி, அந்த நடிகைக்காக காத்துக் கொண்டிருந்தார்.

நாள் முழுக்க மெட்டுப் போட்ட தேவா..ஒரே வார்த்தையில் வேண்டாம் என்ற பிரபுதேவா.. சூப்பர்ஹிட் பாடலின் பின்னணி

சற்று நேரத்தில் அந்த நடிகை வரவே டிடி-ஐ பார்த்த அவருக்கு அதிர்ச்சி. அவர் அணிந்திருந்த உடை போலவே அந்த நடிகையும் உடையணிந்து வந்திருக்கிறார். உடனே அந்த நடிகை டிடி-ஐப் பார்த்து நீங்கள் வேறு உடை அணிந்து கொள்ளுங்கள். ஒரே மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்காது என்று சொல்லியிருக்கிறார். அந்த தருணத்தில் அவர் வேறு ஏதும் உடைகள் எடுத்து வராததால் அந்த ஷோவின் இயக்குநர் அந்த நடிகையிடம் டிடி வேறு ஏதும் உடைகள் எடுத்துவரவில்லை என்று கூறியபின் அந்தப் பேட்டி ஷுட் செய்யப்பட்டது. தன்னை விட அழகாக யாரும் உடைகள் உடுத்தி வரக்கூடாது என்ற எண்ணத்தில் பேசிய அந்த நடிகையின் செயல் டிடி-க்கு அப்போது வருத்தத்தினை ஏற்படுத்தியது.

இதனை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் திவ்யதர்ஷினி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...