மீனம் மார்கழி மாத ராசி பலன் 2022!

3 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால், இளைய சகோதர, சகோதரிகளுடன் மனக் கசப்புகள் ஏற்படும். 4 ஆம் இடத்தினை புதனும்- சூர்யனும் பார்க்கின்றனர். குழந்தைகள் கல்விரீதியாக மந்தநிலையில் இருந்து மீண்டும் மிகச் சிறப்பாகப் படிப்பர்.

5 ஆம் இடத்தினை குருபகவான் பார்க்கிறார், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கப் பெறும். குழந்தைப் பேறுக்காக காத்திருப்போருக்கு நற் செய்தி வீடு தேடி வரும். பிள்ளைகளுக்கு உயர்கல்வி ரீதியாக சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

திருமண வயதில் இருப்போருக்கு எதிர்பார்த்த வரன் கைகூடும், நிச்சயதார்த்தம் வரை விறுவிறுவென காரியங்கள் நடந்தேறும். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

தொழில் கூட்டாளர்களின் ஆதரவு அதிகரிக்கும், தொழில்ரீதியாக நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபத்தினை நோக்கிப் பயணிப்பீர்கள். தொழில் அபிவிருத்தி குறித்து தயங்கிய நீங்கள், தன்னம்பிக்கையுடன் அடியெடுத்து வைப்பீர்கள்.

அறிமுகம் இல்லாத நபர்களிடன் எச்சரிக்கையாகச் செயல்படுதல் நல்லது, ஜாமீன் போடுதல் போன்ற விஷயங்களைச் செய்யாதீர்கள். ஆன்மிகப் பயணங்களை குடும்பத்துடன் செய்வீர்கள்.

வேலைவாய்ப்புரீதியாக பணிச்சுமை சற்று அதிகமாகக் காணப்படும், இருப்பினும் இது நிச்சயம் ஆதாயப் பலனைக் கொடுக்கும்.

செலவினங்கள் ஏற்பட்டாலும் அது சுபச் செலவாகவே இருக்கும். பனவரவு எதிர்பார்த்ததுபோல் இருக்கும். நீண்டகாலமாக அடையாமல் இருந்த பழைய கடன்களை அடைப்பீர்கள்.

குருவின் பார்வை கோடி நன்மையினைக் கொடுக்கும். அசையாச் சொத்துகள் மூலம் பண வரவு சிறப்பாக் இருக்கும்.