தனுசு சித்திரை மாத ராசி பலன் 2023!

தனுசு ராசியினைப் பொறுத்தவரை பல மாற்றங்களைச் சந்திக்கக்கூடிய மாதமாக இருக்கும். குரு பகவானின் பெயர்ச்சியால் தைரியத்துடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பீர்கள்.

குரு பகவான் சனியின் பார்வையில் ராகுவுடன் இணைகிறார்; இதுவரை சந்தித்த அவமானங்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் காலகட்டமாக இருக்கும்.

செயல்பாடுகளில் தெளிவுத் தன்மை இருக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரித்துக் காணப்படுவீர்கள். குல தெய்வக் கோயிலுக்குச் சென்று அன்னதானம் செய்யுங்கள். இரண்டாம் இடத்தில் செவ்வாய் பகவானின் நீச்சப் பார்வை விழுவதால் எதிரிகளின் பார்வை குடும்பத்தின் மீது விழும்.

குடும்ப விரிசலைப் பயன்படுத்தி மூன்றாம் நபர்கள் உள் நுழைவர். நண்பர்களின் விஷயத்தில் மிகக் கவனமாக இருத்தல் நல்லது. நண்பர்களால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.

செலவினங்கள் குறையும்; பண வரவு அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். தொழில்ரீதியாக புது முயற்சிகளைச் செய்யும்போது அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை பெறுதல் நல்லது.

வேலைவாய்ப்புரீதியாக பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் போன்ற விஷயங்களில் இழுபறி நீடிக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை எதிர்பாலின நண்பர்களால் பெரும் பிரச்சினைகள் ஏற்படும். பெற்றோர் அறிவுரையினைக் கேட்டு நடத்தல் வேண்டும்.

காமாட்சி அம்மன், மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வருதல் வேண்டும்.