ஜோதிடம்

விருச்சிகராசியினருக்கு நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது

விருச்சிகராசிக்கு செவ்வாய் பகவன் அதிபதி . இந்த ராசியினர்தான் ஏழரை சனிக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுபவராக இருக்கின்றனர். ஏனென்றால் எல்லா ராசியினருக்கும் ஏழரை சனி வரும் இப்போது தனுசு ராசிக்கும் ஏழரை சனி நடக்கிறது. ஏழரை சனி நடப்பவர்களுக்கு பாதிப்புகள் கடுமையாக இருக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தொடர் இறைவழிபாடு செய்ய வேண்டும் என ஜோதிடர்களும், ஆன்மிகவாதிகளும் பொதுவாக கூறுவர்.

3728306bbad7fb02320c08b445253f1a

மற்ற ராசிகளுக்கு பாதிப்பு கடுமையாக இருந்தால் விருச்சிகராசிக்கு மிக கடுமையாக இருக்கும் என்பதே உண்மை.

கடந்த 2012ல் இருந்து தாங்க முடியாத துயரமான வாழ்வை இவர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மனித வாழ்வு என்றால் துன்பமும் துயரமும் இருப்பதுதான் ஆனால் இவர்கள் வாழவே முடியாது என்ற அளவு பல துன்பங்களை பெற்றார்கள் என்பது உண்மை.

உக்கிரமான செவ்வாய் வீட்டை கொண்டதால் இவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் .

விருச்சிகராசியினர் அதிலும் கேட்டை, அனுஷம் நட்சத்திரக்காரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் . மிகபிசியான ஒரு ஜோதிடர் ஒரு நாளைக்கு 10 பேருக்கு ஜோதிடம் பார்க்கிறார் என்றால் அவர் 7 ஜாதகம் விருச்சிகராசி ஜாதகம் விருச்சிக ராசி ஜாதகத்தைதான் பார்க்கிறார். எந்த அளவு இவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ஜோதிடர்களை தேடி அலைவார்கள் என பார்த்துக்கொள்ளலாம்.

யூ டியூப்பில் ஒரு ஜோதிடரை வைத்து என் நண்பர் ஒருவர் ராசி பலன்களை வெளியிட்டு வருகிறார். அவருடைய மற்ற ராசி வீடியோக்கள் எல்லாம் காற்று வாங்குகிறது விருச்சிக ராசி பலன்கள் மட்டும் சில மணி நேரங்களில் அதிக மக்கள் பார்த்து விடுகிறார்கள் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் விருச்சிகராசிக்காரகள் இருக்கிறார்கள்.

தற்போது பாதச்சனி நடந்து வருகிறது இது ஏழரைச்சனியின் இறுதிக்காலகட்டமாகும்

கடந்த காலங்களில் குடும்ப வாழ்க்கையில் சண்டை சச்சரவு, விவாகரத்து, கோர்ட், பஞ்சாயத்து, தொழிலில் கடும் நஷ்டம், திறமை இருந்தும் சரியான வேலை அதற்கேற்ற ஊதியம் இல்லாமை எல்லாம் இருந்து வந்தது.

இது எல்லாம் மாறப்போகிறது தீபாவளியை ஒட்டி வர இருக்கும் குருப்பெயர்ச்சி அதற்கான தொடக்கமாக இருக்கப்போகிறது. ஜென்ம குருவாக இருந்து தடைகளை கொடுத்து வரும் குரு பகவானும் மாறப்போகிறார். உங்களுக்கு இரண்டாமிடத்துக்கு வருகிறார். இதனால் உங்களுக்கு நினைக்கும் செயல்களில் நன்மைகள் உருவாகும் அனைத்து தடைகளும் விலகும். வரும் ஜனவரியில் சனிப்பெயர்ச்சி நடக்கும்போது சுத்தமாக அனைத்து தடைகளும் விலகி விடும். கடந்த சில ஆண்டுகளில் நீங்கள் செய்த வழிபாடு பிரார்த்தனை எல்லாம் கை மேல் பலன் கொடுக்கும்.

Avatar photo
Staff