சிவாஜிக்கு டெஸ்ட் வைத்த இரு ஜாம்பவான்கள்… ஆனால் நடிகர் திலகம்னா சும்மாவா என்ன!…

தமிழ் சினிமாவில் பல கதாநாயகர்கள் இருந்தாலும் ஒரு சிலர் அவர்கள் காலம் தாண்டியும் வாழ்ந்து கொண்டிருப்பர். அப்படிபட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அறிமுகமான இப்படத்திலேயே இவரின் வசனங்களை கண்டு திரையுலகமே வாயடைத்து போனது. அப்படி தனது திறமையினால் வசனங்களை மிகச்சிறப்பாக பேசியிருந்தார் நடிகர் திலகம். இவர் பின் மனோகரா, இல்லற ஜோதி, மங்கையர் திலகம் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

கால் மேல் கால் போட்டு அமர்ந்த நடிகை.. NO சொன்ன MGR!!.. ஆனாலும் அவங்க டாப் ஹீரோயனானது எப்படி?

இவரை நடிப்பு பல்கலைகழகம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு இவரின் திறமைகள் மிகப்பெரியது. சினிமாவில் இவரை பார்த்துதான் பல நடிகர்கள் நடிப்பையே கற்று கொள்வர். அந்த அளவுக்கு அசாதாரண திறாமை படைத்தவர் சிவாஜி கணேசன்.

இவர் நடிப்பில் 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் அந்த நாள். இத்திரைப்படத்தினை எஸ்.பாலசந்தர் இயக்கினார் மற்றும் ஏ.வி.மெய்யப்ப செட்டியர் இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் கதாசிரியராக இருந்தவர்தான் ஜவார் சீதாராமன். இவர்கள் இருவருக்கு சிவாஜியின் திறமை மீது சந்தேகம் இருந்துள்ளது. இவர் எவ்வாறு நாம் கூறும் அனைத்து வ்சனங்களையும் மிகக் கட்சிதமாக பேசுகிறார் என சந்தேகித்துள்ளனர் இப்படத்தின் உதவி இயக்குனரான முக்தா ஸ்ரீனிவாசனும் ஜவாரும்..

பருத்திவீரன் படத்தையே கழட்டிவிட்ட சூர்யா!.. பகீர் உண்மையை போட்டு உடைத்த சமுத்திரகனி!..

இவர் காரில் செல்லும் போதும் வரும்போதும் நாம் கொடுக்கும் வசனங்களை மனப்பாடம் செய்துவிட்டு வந்து இங்கு பேசுகிறார். அதனால்தான் இவரால் இவ்வளவு அழகாக பேச முடிகிறது என இவர்களுக்குள் பேசி கொள்வார்களாம். அதனால் இவர்கள் இருவரும் இணைந்து சிவாஜிக்கு ஒரு டெஸ்ட் வைக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சிவாஜி மறுநாள் ஷூட்டிங்கிற்கு வரும்போது அவரிடம் ஏற்கனவே சொல்லப்பட்ட சீனை எடுக்காமல் வேறு சீனை எடுக்க போவதாக தெரிவித்துள்ளனர். சற்றும் அசராத சிவாஜி கணேசன் அப்படியா… சரி என்ன சீன் என சொல்லுங்க.. என கூறியுள்ளார். உடனே அவர்களும் கூற சிவாஜி அந்த சீனை வழக்கம்போல் கட்சிதமாக நடித்து கொடுத்தாராம். உடனே இந்த இரு ஜாம்பவான்களும் வாயடைத்து போயிருந்தனராம்.

எம்எஸ்வி மேல் எழுந்த கோபம்?.. நேரடியா வெளிக்காட்டாம கவிஞர் கண்ணதாசன் எடுத்த புது ரூட்.. இதுனால தாங்க அவரு லெஜண்ட்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews