தளபதி விஜய்யை அன்றே கணித்த விக்ரமன்.. பூவே உனக்காக பட ஷுட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்

இன்று தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் அறிமுகத்தால் சினிமாவில் நுழைந்து படிப்படியாக முன்னேறி மிகப்பெரிய ஸ்டாராகத் திகழ்கிறார். தனது தந்தையின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தவருக்கு 2006-ல் வெளியான பூவே உனக்காக படம் அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும், நிரந்தர இடத்தையும், அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தையும் அளித்தது.

இப்படி விஜய்யின் சினிமா வரலாற்றில் மைல் கல்லாக அமைந்த பூவே உனக்காக படத்தினை இயக்கியவர் விக்ரமன். இந்தப் படத்தின் ஷுட்டிங் அனைத்தும் கன்னியாகுமரி பகுதியில் எடுக்கப்பட்டது.

இப்படி இந்தப் படத்தில் விஜய் நடித்த முதல் காட்சி படமாக்கப்பட்டது. இந்தக் காட்சியை எடுப்பதற்கு முன் விஜய்க்கு காட்சி குறித்த வசனங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார் விக்ரமன். வழக்கமாக விக்ரமன் இயக்கும் படங்களில் நடிகர்களுக்கு வசனங்கள் அவரே சொல்லித் தருவது வழக்கம். இந்நிலையில் விஜய்க்கு விக்ரமன் வசனங்கள் சொல்லிக் கொடுக்க அது மிகப்பெரிய வசனமாக இருந்திருக்கிறது.

முதல்தடவை விக்ரமன் சொல்லிக் கொடுத்ததும் ஓகேசார் டேக் போகலாம் என்றிருக்கிறார் விஜய். விக்ரமனுக்கு ஷாக். எப்படி ஒருதடவை சொல்லிக் கொடுத்ததும் சொல்லுவார் என்று. பெரிய நடிகர்களே ஒருமுறைக்கு இருமுறை வசனங்களை மீண்டும் கேட்கும் நிலையில் ஒரே தடவையில் சொல்லிவிடுவாரா என்ற சந்தேகத்துடன் அந்தக் காட்சியை எடுத்திருக்கிறார்.

அஜீத்துக்காக இப்படி ஒரு பாட்டை எழுதச் சொன்ன இயக்குநர்.. பாடலில் ட்விஸ்ட் வைத்து எழுதிய பாடலாசிரியர்

விஜய் இயக்குநர் விக்ரமனே எதிர்பார்க்காத வகையில் ஒரே தடவையில் அந்த பெரிய வசனத்தைச் சொல்லி முடிக்க ஆச்சர்யப்பட்டுப் போயிருக்கிறார் விக்ரமன். மேலும் பூவே உனக்காக டப்பிங் பணிகள் நடைபெற்ற வேளையில் அப்போது விஜய் அடுத்த படமான மாண்புமிகு மாணவன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அந்த தருணங்களில் காலை 7 மணிக்கெல்லாம் டப்பிங் ஸ்டுடியோ சென்று 9 வரை அமர்ந்து ஷூட்டிங்கில் சொன்னவாறே அனைத்து வசனங்களையும் டப்பிங் பணிகளிலும் விரைவாக முடித்திருக்கிறார் விஜய். அப்போது விக்ரமன் விஜய்யைப் பார்த்து வியந்து அப்போதுள்ள முன்னனி தயாரிப்பாளர்களிடம் இவர் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக வருவார் என்று ஆருடம் கூறியிருக்கிறார்.

அன்று விக்ரமன் நினைத்து போலவே இன்று தமிழ்சினிமாவின் உச்ச நடிகராக விளங்குகிறார் விஜய். பூவே உனக்காக படமும் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையன்று. மேலும் விக்ரமனுடன் உன்னை நினைத்து படத்திலும் சில காட்சிகள் நடித்த விஜய் பூவே உனக்காக படம் பார்ட்-2 போலிருக்கிறது என்று கூறி அதிலிருந்து விலக்கிக் கொண்டார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...