விருது வாங்க போகக் கூட கார் இல்லாத நடிகை.. தமிழின் முதல் பெண் இயக்குநருக்கு எம்.ஜி.ஆர் செய்த பேருதவி!

சினிமாவில் ஆண்களே ஆதிக்கம் செலுத்து வந்த நிலையில் 1940களில் சுதந்திரப் போராட்ட காலகட்டங்களில் தமிழ் சினிமா அப்போது தான் தலை தூக்க ஆரம்பித்தது. ஊமைப்படங்கள் வசனம் பேசி நடிக்கும் படங்களாக வெளிவர ஆரம்பித்தது. அப்போதைய காலகட்டங்களில் சினிமாவில் அறிமுகமானவர் தான் திருவையாறு பஞ்சாபகேச ராஜலட்சுமி எனும் டி.பி.ராஜலட்சுமி. தமிழ் சினிமாவின் முதல் ஹீரோயின். அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் ராணி என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர்.

நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் அறிமுகத்தால் 11 வயதிலேயே நாடகத் துறைக்கு வந்தார். அங்கு பயிற்சி பெற்று தொடர்ந்து பல்வேறு நாடகக் குழுக்களில் நடிக்க ஆரம்பித்தார். நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டங்களில் சுதந்திரப் போராட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்றது. அப்போது விடுதலை வேட்கையைத் தூண்டும் பல தேசபக்திப் பாடல்களையும் பாடினார் விடுதலை உணர்வைத் தூண்டினார் டி.பி.ராஜலட்சுமி. இதற்காக சிறைக்கு சில முறை சென்றும் வந்திருக்கிறார்.

1929-ல் வெளிவந்த கோவலன், 1930-ல் வெளிவந்த உஷா சுந்தரி, 1931-ல் வெளிவந்த காளிதாஸ், ராமாயணம் போன்ற பல படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவின் முதல் மௌனப் படமான கீசகவதம் என்னும் படத்தின் கதாநாயகி இவரே. இவர் நடித்த படங்கள் எல்லாமே ஊமைப் படங்களாகவே அமைந்தது. இதனையடுத்து காளிதாஸ் படம் முதல் பேசும் படமாக வெளிவந்தது. அதிலும் நம் சினிமாராணி தான் ஹீரோயின்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு சீக்ரெட்.. அடேங்கப்பா நடிக்கிறதுல இவ்வளவு டெக்னிக் இருக்கா?

இவ்வாறு தமிழ்சினிமாவின் ஆரம்பகாலப் படங்களில் நடித்த டி.பி.ராஜகுமாரி மிஸ் கமலா என்ற படத்தினை எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற பெருமைகளைப் பெற்றார் டி.பி.ராஜகுமாரி.

இப்படி பல படங்களில் நடித்த டி.பி.ராஜகுமார் தொடர்ந்து தயாரிப்பில் ஈடுபட பல படங்கள் மோசமான தோல்வியைத் தழுவியது. இதனால் தான் சம்பாதித்த சொத்துக்களை இழந்தார். இறுதியில் கார் கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. அவரிடம் கார் இல்லாத நிலையைக் கேள்விப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அப்போது அவரைத் தொடர்பு கொண்டு, “நீங்கள் விருது வாங்கச் செல்வது முதல் விருதினைப் பெற்று வீடு திரும்பும் வரை என்னுடைய காரை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று கூறி அவரின் காரை அனுப்பி வைத்தார்.

இவ்வாறு நலிந்த கலைஞர்கள் பலரது வாழ்க்கையிலும் ஒளிவிளக்கேற்றி இதயதெய்வமாகத் திகழ்ந்திருக்கிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...