பருத்திவீரன் படத்தையே கழட்டிவிட்ட சூர்யா!.. பகீர் உண்மையை போட்டு உடைத்த சமுத்திரகனி!..

நடிகர் சூர்யாவின் உறவுக்காரரான ஞானவேல் ராஜா ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் பருத்திவீரன் படத்தை தயாரித்தார். ஆனால், அவர் அந்த படத்தை தயாரிக்கவில்லை என்றும் பாதியிலேயே பணம் இல்லை என இயக்குனர் அமீரை கைகழுவி விட்டார் என்றும் நடிகர் சூர்யாவும் தம்பி அறிமுகமாகும் படத்தின் மேல் ஈடுபாடு செலுத்தாமல் அமீரிடமே அந்த படத்தை விட்டு விட்டு சென்றார் என்றும் சமுத்திரகனி தற்போது பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த வாரிசு சூர்யா ஹீரோவாக நடித்து வந்த நிலையில், அவரது இளைய வாரிசு கார்த்தியும் ஹீரோவாக பருத்திவீரன் படத்தில் கடந்த 2007ம் ஆண்டு அறிமுகமானார்.

கார்த்தியை ஹீரோவாக்கிய அமீர்:

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கார்த்தி இயக்குனராக போகிறேன் எனக் கூறி வந்த நிலையில், அவரை ஹீரோவாக மாற்றியதே அமீர் தான். ஆனால், கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கூட அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. பல ஆண்டுகளாக இருவருக்கும் அப்படி என்ன தான் மனக்கசப்பு என மீடியாக்கள் கிண்டிய நிலையில், பல திகில் ஊட்டும் உண்மைகள் வெளியாக தொடங்கி உள்ளன.

இயக்குனர் அமீர் மீது தான் தவறு என்றும் சொன்ன பட்ஜெட்டை தாண்டி பருத்திவீரன் படத்தை அதிக வருடங்கள் எடுத்து அதிக பணச் செலவை செய்து அமீர் ஏமாற்றி விட்டார் என ஞானவேல் ராஜா குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு நடிகர்கள் சசிகுமார் மற்றும் சமுத்திரகனி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சமுத்திரகனி கண்டனம்:

சசிகுமாரை தொடர்ந்து தற்போது இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞானவேல் ராஜா பிரதர் பெரிய தப்பு பண்ணிட்டீங்க என்றும் பாதியிலேயே பருத்திவீரன் படத்தை விட்டுட்டு போன நீங்க அந்த படத்தின் தயாரிப்பாளரா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளார்.

மேலும், நடிகர் சூர்யாவும் அந்த படத்திற்காக பணம் செலவழிக்காமல் அதை அப்படியே அமீரிடம் கொடுத்து விட்டு கிளம்பி விட்டார் என்றும் உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

சசிகுமார் மற்றும் அமீரின் சொந்தக்காரர்கள் பலரிடம் ஆளுக்கொரு லட்சம் என கடன் வாங்கி அமீர் அண்ணன் அந்த படத்தை எடுத்தார் என்றும் அவருடன் 6 மாதங்கள் அந்த படத்தில் நான் பணியாற்றி உள்ளேன் என்றும் சமுத்திரகனி கூறியுள்ளார்.

அமீர் – ஞானவேல்ராஜா மோதலும் அதற்கு காரணமாக உள்ள சூர்யா குடும்பத்தையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சினிமாவில் இத்தனை ஆண்டுகளாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பலரை மோசடி செய்துள்ளதா? என்கிற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

F yMMM9XcAAY1sN

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.