கமல் நடிச்சதுலயே கஷ்டமான படங்கள்… ஒரே கல்லுல மூணு மாங்கா அடித்த இந்தியன் 2 படக்குழு!

இந்தியன் 2 படம் பரபரப்பாகத் தயாராகி வருகிறது. இன்னும் ஒரு பாடல் தான் பாக்கி இருக்கிறதாம். இந்நிலையில் படத்திற்கான புரொமோஷன் வேலைகளை இயக்குனர் ஷங்கர் முடுக்கி விட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக நடந்து வரும் ஐபிஎல் மேட்சில் இருந்து தொடங்கி உள்ளார்கள். கமலும், ஷங்கரும் இணைந்து படத்திற்கான அப்டேட்டுகளை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே தந்த வண்ணம் உள்ளனர்.

கமல் சென்னை கிங்ஸ் தான் ஜெயிக்கும் என்றது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைத் தந்துள்ளது. அதே போல் இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மே 22ம் தேதியும், படம் ஜூலை 12ம் தேதியும் ரிலீஸ் என்ற தகவல் சமீபத்தில் வெளியான போஸ்டரின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் போஸ்டரில் குதிரை வீரனாக கமல் பளிச்சென்ற அழகான பேக்ரவுண்டில் வருகிறார்.
இப்படி ஒரே போஸ்டரின் மூலம் இந்தியன் 2 படக்குழு ஒரே கல்லுல 3 மாங்காய்… அடித்துள்ளனர். இனி படம் குறித்து கமல் என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.

Indian 2
Indian 2

இந்தியன் 2 படம் ஆரம்பிக்கும்போது இந்தியன் 3 பண்ணனும்னு ஐடியா இல்லை. பெரிய கதை. எந்த சீனையும் எடுக்க முடியாது. அதை எடுக்கும்போது அதோட சைஸ அதுவா முடிவு பண்ணிட்டு. ஒரே பார்ட்ல போட்டு அடைக்கும்போது நிறைய சீனைக் கட் பண்ண முடியாது. எந்த சீனையும் தூக்கவும் முடியாது. எந்த சீனையும் குறைச்சாலும் அதோட அழகு போயிடும்.

இந்தியன் 2 உடன் 3 யும் சேர்த்து எடுத்ததால் தான் ஒத்துக்கிட்டேன். எனக்கு இந்த ரெண்டு கதையையும் பிடிச்சதால தான் ஒத்துக்கிட்டேன். அது எத்தனை கதைங்கறது முக்கியமல்ல. இந்த ஓடிடி காலத்துல 8 எபிசோட் சேர்ந்தது தான் ஒரு படம்.

அப்போ தான் முழுமையா இருக்கும். முந்தி எல்லாம் 18 பார்ட் இருக்கும். அதுல இருந்து குறைஞ்சி 12 ஆயிரம் அடிக்கு வந்து மறுபடியும் 22 ஆயிரம் அடிக்குப் போயிட்டோம்.

மேக்கப் போட்டு நடிக்கறதே பெரிய விஷயம். நான் பட்ட பாடே போதும். இதுல எங்கங்க பாடுறது? பிராஸ்தடிக் மேக்கப் பல மணி நேரம் ஆகும். ஷங்கர் போட்டுருவாருன்னு நம்பிக்கை வந்தது. கால் கையை எல்லாம் நீட்டி மடக்கி ஒடுக்கி வைக்கணும். அதுவும் 28 வருஷம் கழிச்சி. அத்தனையும் செஞ்சி ஆகணும்.

நான் கஷ்டமான படம் நடிச்சேன்னா தசாவதாரமும், இந்தியன் 2ஐயும் சொல்வேன். திருப்பியும் பண்ணுவேங்களான்னு கேட்டா வேற ஏதாவது பேசலாமான்னு தான் கேட்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews