எம்எஸ்வி மேல் எழுந்த கோபம்?.. நேரடியா வெளிக்காட்டாம கவிஞர் கண்ணதாசன் எடுத்த புது ரூட்.. இதுனால தாங்க அவரு லெஜண்ட்!

இந்த காலத்தில் தமிழில் ஏராளமான பாடல்கள் நாளுக்கு நாள் வெளி வந்த வண்ணம் உள்ளது. ஆனால், அவற்றில் பெரும்பாலான பாடல்களில் வரிகள் பெரிய அளவில் மனதைக் கவரும் வகையில் இல்லை என பரவலாக ஒரு விமர்சனம் இருந்து வருகிறது.

இதற்கு காரணம், அதிகமாக வரிகளுக்கு பாடலாசிரியர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது தான் என்றும் விமர்சிப்பவர்கள் குறிப்பிடுகின்றனர். அப்படி இருந்தும் தொடர்ந்து சில சிறந்த பாடலாசிரியர்கள் இருப்பதால் அவ்வப்போது காதுக்கு இனிய வரிகளை கேட்கமுடியும் என்பதும் தெரிகிறது.

அப்படி காலம் கடந்தும் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்று தாக்கத்தை ஏற்படுத்தும் பல பாடலாசிரியர்கள் மற்றும் கவிஞர்கள் உள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க ஒருவர் தான் கவிஞர் கண்ணதாசன். இவர் எழுதும் பாடல்கள், எந்த காலத்திற்கும், அனைவருக்கும் தேவை ஆனதாக மட்டும் இருக்காமல், எளிமையான வகையில் புரிந்துகொள்ளும் படியும் இருக்கும். இதனால், கண்ணதாசன் வரிகளுக்கான ரசிகர்கள் பட்டாளமும் அதிகம்.
kavignar kannadasan

கவிஞர் கண்ணதாசன் வரிகளில் ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’, ‘தெய்வம் தந்த வீடு’, ‘போனால் போகட்டும் போடா’ என எக்கச்சக்க பாடல்களை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அது மட்டுமில்லாமல், கண்ணதாசன் வரிகள் எழுதும் சமயத்தில் நடைபெற்ற பல சுவாரஸ்ய சம்பவங்கள் அவ்வப்போது மக்கள் கவனத்தை பெறும்.

அப்படி ஒரு சம்பவம் குறித்த செய்தியை தற்போது காணலாம். பொதுவாக, ஒரு திரைப்படத்தின் இசை அமைப்பாளர் முதலில் ட்யூன் போட்டு, பின்னர் பாடலாசிரியரிடம் இருந்து வரிகளை வாங்கிக் கொள்வார்கள் என தெரிகிறது. அப்படி இருக்கையில், எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ‘பெரிய இடத்துப் பெண்’ என்ற திரைப்படத்திற்கு எம்.எஸ்.வி இசையமைத்திருந்தார். வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுத, ட்யூன் போட வராமல் எம்எஸ்வி தூங்கி விட்டதாக தெரிகிறது.
kannadasan with msv

இதனால், முதலில் வரிகளை எழுதி விட்டு டியூன் செய்து கொள்ளலாம் என கண்ணதாசனிடம் படத்தின் இயக்குனர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. எம்எஸ்வி தூங்கியதால் இந்த முடிவு எடுக்கப்பட, அந்த சூழ்நிலையை பாடலின் வரிகளில் குறிப்பிட்டு இசை அமைப்பாளரையே ஜாலியாக கிண்டி இருப்பார் கவிஞர் கண்ணதாசன். அந்த பாடலின் முதல் வரி, “அவனுக்கென்ன தூங்கி விட்டான், அகப்பட்டவன் நான் அல்லவா” என எம்எஸ்வி தூங்கி, இசையமைக்க தாமதமாக வந்ததையே பாட்டிம் வரியாக குறிப்பிட்டிருப்பார் கண்ணதாசன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews