இது ரீமேக் இல்ல ரியல்.. 32 வருடகால நட்பின் ரீயூனிட்.. தலைவர் 170-ல் அமிதாப் பச்சன்!

Amitabhbachchan: இந்திய சினிமாவின் அசைக்க முடியாத ஹீரோக்களில் இருவர் முக்கியமானவர்கள். இருவருமே சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை கொண்டவர்கள். அப்படிப்பட்ட இருவர் ரஜினியும், அமிதாப் பச்சனும்.

 

ஹிந்தி திரையுலகில் டான் படங்களில் நடித்து, ஹாலிவுட் பாணியை மக்களுக்கு காட்டியவர் அமிதாப் பச்சன். ஆரம்பத்திலிருந்தே ஹீரோ, வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட், கேமியோ என மாறுபட்ட விதங்களில் சினிமாவில் பங்காற்றி வந்தார்.

ஹிந்தியில் மல்டி ஸ்டார் படங்கள் 80களிலேயே பிரபலமானதால், அமிதாப் பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். 90களில் ஷாருக்கானுடன் அமிதாப் பச்சன் இணைந்து நடித்த ’கபி குஷி கபி கம்’ மிகவும் பிரபலமானப் படம் 2009ல் அமிதாப் ஆர். பால்கியின் இயக்கத்தில் நடித்த ‘பா’ படம் வித்தியாசமான திரைக்கதையைக் கொண்டது. தொடர்ந்து ஹீரோவாக மட்டுமல்லாமல் எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் முயற்சி செய்யும் அமிதாப் பச்சன் நிஜமாகவே சூப்பர் ஸ்டார்தான்.

5 வருடங்களாக நீடித்த மர்மம்… மனம் திறந்த போனி கபூர்… ஸ்ரீதேவிக்கு நடந்தது இதுதான்!

அமிதாப் பச்சனுடன் நேரடி ஹிந்தி படத்திலும் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இருப்பினும், 1980-1990களின் சக்ஸஸ் படங்களின் தமிழ் ரீமேக்கிலும் ரஜினிகாந்த் நடித்துள்ளார் அந்த பட்டியல் இதோ. தீவார்-தீ, டான்-பில்லா, குத்தாரின்-படிக்காதவன், கஸ்மே வாதே-தர்மத்தின் தலைவன், நமக் ஹலால்-வேலைக்காரன், மார்டின்-மாவீரன், மஜ்பூர்-நான் வாழ வைப்பேன், கூன் பாசினா-சிவா, லாவாரிஸ்-பணக்காரன், ராம் ராபர்ட் ரஹீம்-அமர் அக்பர் அந்தோணி, திரிசூலின்-மிஸ்டர் பாரத்.

Amitabhbachchan

இதில் எல்லா படங்களும் சூப்பர் ஸ்டாருக்கு திருப்புமுனையாக அமைந்த படங்கள். ரஜினிகாந்த் சமீபத்தில் நடித்த 169வது படமான ஜெயிலர் படம் நெல்சனின் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டானது அதனைத் தொடர்ந்து தலைவரின் 170வது படம் ஜெய் பீம் புகழ் டி.ஜே ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இன்று திருவனந்தபுரந்தில் முதல் கட்ட படப்பிடிப்பு துவங்கும் நிலையில், படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களின் பட்டியலை லைகா நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் இணையும் விஷால்… பல வருடங்களுக்குப் பின் கிடைத்த வெற்றி!

ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா, ரித்திகா சிங் இவர்களுடன் ஃபஹத் பாசில் இணைந்து நடிக்க உள்ளார். மேலும் இந்தக் கூட்டணியில் ரஜினியின் நீண்ட கால நண்பர் அமிதாப் பச்சனும் இணைந்துள்ளார். அமிதாப் தமிழில் நடிக்க இருந்த முதல் படம் எஸ்.ஜே சூர்யாவின் உயர்ந்த மனிதன் சில காரணங்களால் இந்த படம் நடைபெறாமல் போன நிலையில், தலைவர் 170 மூலம் தமிழ் படத்தில் நடிக்க போகிறார் அமிதாப் பச்சன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...