விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் இணையும் விஷால்… பல வருடங்களுக்குப் பின் கிடைத்த வெற்றி!

ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர்கள் பெரும்பாலும் மென்மையான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, பின் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறுவார்கள். ஆனால், விஷால் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கதாநாயகனாகவே நடிக்கத் தொடங்கினார்.

‘செல்லமே’, ‘சண்டக்கோழி’ இந்த இரு படங்களுமே விஷாலுக்கு வெற்றி படமாக அமைந்தது. லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படத்தில் முதலில் தளபதி விஜய் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பின் அந்தப் படம் விஷாலுக்கு கிடைத்தது அவரின் அதிர்ஷ்டம்.

‘திமிரு’, ‘தாமிரபரணி’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘பாண்டிய நாடு’, ‘பூஜை’ போன்ற படங்கள் ஆக்‌ஷன் கலந்த காதல் படமாக அமைந்து வெற்றியைக் கொடுத்தது. தன்னுடைய படங்களை தானே தயாரித்து நடித்து வந்தார் விஷால். பின் வந்த படங்கள் அனைத்துமே ஓரளவுக்கு ஓடியதே தவிர பெரிய வெற்றியினைக் கொடுக்கவில்லை. இதற்கிடையில் ‘துப்பறிவாளன் 2’ மிஷ்கினுடன் பிரச்சனை, நண்பர்களின் நம்பிக்கை துரோகம் என துவண்டு போன விஷால், பிளாக் பஸ்டர் படத்திற்காக காத்திருந்தார்.

அன்பான அடங்காதவன் அசராதவன் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும், தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தார். இந்நிலையில் ஆதிக் விஷாலுக்கு ஒரு கதை சொல்லி அது அவருக்கு பிடித்து போக நடிக்க சம்மதித்தார். அப்படி உருவான படம்தான் ‘மார்க் ஆண்டனி’. இந்தப் படத்தில் விஷாலின் நண்பனாக நடித்த எஸ்.ஜே சூர்யாதான் படத்தின் மெயின் அட்ராக்‌ஷன் எஸ்.ஜே சூர்யா. அவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த போது ஓவர் ஆக்டிங் செய்வதாக கூறி விமர்சனம் செய்தனர்.

ஆனாலும், அவருக்கென ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். அவரின் நடிப்பில் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை. அவர் ஹீரோவாக அறிமுகமான ‘நியூ’ படத்தில் நடித்தது போலவே மார்க் ஆண்டனியிலும் நடித்துள்ளார். இருப்பினும் மார்க் ஆண்டனியை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அவருடைய நடிப்புத் திறனை கொண்டாட இந்தனை வருட காலமாகி இருக்கிறது. இப்படம் விஷால், ஆதிக் ரவிச்சந்திரன், எஸ்.ஜே சூர்யா என மூவருக்குமே சூப்பர் ஹிட்டாக அமைந்ததுள்ளது. இப்படம் மக்களுக்கு பிடித்தது மட்டுமில்லாமல், தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தையும் கொடுத்துள்ளது.

‘மார்க் ஆண்டனியி’ படத்தின் தயாரிப்பளரிடம் ரசிகர் ஒருவர் மார்க் ஆண்டனி ரூ. 100 கோடியை தொட்டுவிட்டதா? என சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் கேட்டதற்கு இன்னும் சில நாட்களில் என்று பதிலளித்துள்ளார். விரைவில் ரூ. 100 கோடி வசூல் செய்யும் முன்னணி ஹீரோக்களின் படங்களின் வரிசையில் மார்க் ஆண்டனியும் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...